திருப்பதியில் சில்மிஷம்... ரசிகர்களை கன்னத்தில் அறைந்த சமந்தா!

By Chakra

Samantha
திருப்பதியில் தன்னிடம் சில்மிஷம் செய்த ரசிகர்களை கன்னத்தில் அறைந்தார் நடிகை சமந்தா.

மாஸ்கோவின் காவிரி. விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் நடித்துள்ளவர் சமந்தா. முரளி மகன் அதர்வா கதா நாயகனான பாணா காத்தாடி படத்திலும் ஜோடியாக நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகை இவர்.

சமந்தாவை திருப்பதியில் ஒரு கடையை திறந்து வைக்க நேற்று அழைத்து இருந்தனர். அவரை காண அங்கு ஏராளமான ரசிகர்கள் திரண்டு நின்றனர். சமந்தா காரில் இருந்து இறங்கியதும் கூட்டத்தினர் சுற்றி வளைத்தனர். ரசிகர்கள் மத்தியில் அவர் சிக்கிக் கொண்டார்.

இடுப்பை கிள்ளி அவர்கள் சில்மிஷம் செய்தனர். கைகளைப் பிடித்து இழுத்தனர். அவர்களிடம் இருந்து தப்ப முடியாமல் சமந்தா அலறினார். போலீசார் ஒரு சிலரே நின்றதால் சமந்தாவை மீட்க முடியவில்லை. அதிக தொந்தரவு செய்த 3 ரசிகர்களை கன்னத்தில் மாறி மாறி அறைந்தார் சமந்தா.

நிலைமை மோசமாவதை உணர்ந்த விழாக் குழுவினர் கடை ஊழியர்களை அனுப்பி வைத்து சமந்தாவை ரசிகர்கள் பிடியில் இருந்து மீட்டனர்.

இதுபற்றி சமந்தா கூறுகையில், "ரசிகர்கள் நடத்தை வேதனையைத் தருவதாக உள்ளது. நாங்களும் மனிதர்கள்தான். இதைப் புரிந்து கொள்ள வேண்டும். கடையை திறந்து விட்டு திருப்பதி கோவிலுக்கு போய் ஏழுமலையானை தரிசிக்க திட்டமிட்டிருந்தேன். மனவேதனையால் கோவிலுக்கு போகமலேயே திரும்பிச் செல்கிறேன்," என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X