கலர்ஃபுல்லாக புத்தாண்டை வரவேற்ற நடிகை நதியா.. எந்த நாட்டுல இருக்காங்க தெரியுமா?
சென்னை: நடிகை நதியா தென்னிந்திய சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் ஒருவர். இப்போதும் அவ்வப்போது தமிழ் சினிமாக்களில் எட்டிப் பார்த்தாலும், நதியாவுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மதிப்பும் மரியாதையும் குறையவே இல்லை. இப்படியான நதியா ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் புத்தாண்டு கொண்டாடி உள்ளார். இது தொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மொத்த பூமியும் புத்தாண்டை வரவேற்க தயாராகிக் கொண்டிருக்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த புத்தாண்டை கொண்டாடி வருகிறர்கள். வரவேற்க தயாராகி வருகிறார்கள். இப்படி இருக்கும்போது, உலக நாடுகளில் முதல் நாடாக புத்தாண்டை கொண்டாடும் நாடு என்றால் அது, நியூசிலாந்து. அதேபோல், இரண்டாவது நாடு என்றால் அது ஆஸ்திரேலியா. இந்த இரண்டுமே அருகருகே இருப்பதால் இந்த இரண்டு நாடுகளுமே புத்தாண்டை வரவேற்கும் முதல் இரண்டு நாடுகளாக உள்ளன.

ஆஸ்திரேலியா: இவை இல்லாமல் சில சிறிய சிறிய தீவுகளும் இந்த நாடுகளுக்கு முன்னதாக புத்தாண்டை வரவேற்றாலும், ஒரு நாடாக ஆஸ்திரேலியா தான் இரண்டாவது நாடாக புத்தாண்டை வரவேற்கிறது. ஆஸ்திரேலியாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் மிகவும் பரபரப்பான நகரங்கள் என்றால் அது மெல்போர்ன் மற்றும், சிட்னியை சொல்லலாம். அப்படி இருக்கையில் நடிகை நதியா தனது கணவருடன் புத்தாண்டை கொண்டாடி வரவேற்றுள்ளார்.
நதியா: அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார். அவர் பகிர்ந்துள்ள வீடியோவில் வாணவேடிக்கைகள் இடம் பெற்றுள்ளது. அவரது இந்த புகைப்படம் மற்றும் வீடியோவுக்கு ரசிகர்கள் லைக்குகளை போட்டு வருகிறார்கள்.
ரசிகர்கள்: நடிகை நதியாவைப் பொறுத்தவரை 80களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கியவர். மேலும் நதியா தொடர்ந்து குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்ததால், பெண்கள் மத்தியில் அவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தங்களது குழந்தைகளுக்கு எல்லாம் நதியா என்று பெயர் சூட்டி அன்பை வெளிப்படுத்திய ரசிகர்கள் தமிழ்நாட்டில் அதிகம் என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications











