செக் மோசடி... சரண்யா மோகனுக்கு மலையாளத்தில் தடை!

By Shankar

Saranya Mohan
செக் மோசடி செய்தார் என்ற காரணத்துக்காக நடிகை சரண்யா மோகன் நடிக்கத் தற்காலிக தடை வித்துள்ளது மலையாள தயாரிப்பாளர் சங்கம்.

யாரடி நீ மோகினி, வெண்ணிலா கபடி குழு, பஞ்சாமிர்தம், ஈரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சரண்யா மோகன். மலையாளத்திலும் முன்னணி நடிகையாக உள்ளார்.

தற்போது அழகர்சாமியின் குதிரை என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வர உள்ளது.

இதற்கிடையில் சரண்யா மோகன் மீது மலையாள தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மலையாள பட உலகை சேர்ந்த ஒருவருக்கு சரண்யா மோகன் குறிப்பிட்ட தொகைக்கு செக் கொடுத்து இருந்தாராம். அதை பாங்கியில் போட்ட போது பணம் கொடுக்க வேண்டாம் என பாங்கியில் சொல்லி ஸ்டாப் பேமண்ட் கொடுத்து நிறுத்திவிட்டாராம்.

இதனால் ஆத்திரமான அவர், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்து அதன் மூலம் நடிக்கத் தடை விதிக்கப்பட்டது என்கின்றனர். தற்போது சமரச பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. தடை நீக்கப்பட்டு விடும் என கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X