வீட்டில் அடைத்துக் கொடுமைப்படுத்தினாரா கணவர்?

விவாகரத்து மற்றும் அது தொடர்பான செய்திகளுக்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார் நடிகை பூமிகா.
இது தொடர்பாக இன்று அவர் அளித்துள்ள பேட்டியில், "எனக்கும் என் கணவருக்கும் தகராறு என தொடர்ந்து செய்திகள் வருகின்றன. ஒரு விழாவுக்கு பரத் இல்லாமல் தனியாக போனேன். அன்று முதல் இது போல் வதந்திகள் பரப்பப்படுகின்றன.
மும்பைக்கும், ஹைதராபாத்துக்கும் ஷுட்டிங் தொடர்பாக பறந்து கொண்டிருக்கிறேன். முழு நேரமும் அவரை என்னோடு அழைத்து செல்ல முடியுமா? என் பணத்தையெல்லாம் கணவர் அபகரித்து போய் விட்டதாகவும் செய்தியைப் பரப்புகின்றனர். அப்படி எதுவும் நடக்க வில்லை.
இறுதியாக என்னை பாட்னா வீட்டில் அடைத்து துன்புறுத்தி சித்ரவதை செய்வதாக வதந்தி பரவியுள்ளது. கணவர் மீது போலீசில் புகார் அளித்து இருப்பதாகவும் கூறுகின்றனர். எந்த போலீஸ் நிலையம் என்று சொல்ல முடியுமா? இதெல்லாம் பொய்யானவை. நாங்கள் விவாகரத்துக்கு முயற்சிக்கவில்லை.
படம் தோல்வி அடைந்ததால் கணவரை விட்டு விலகி விட்டதாகவும் கிசுகிசுக் கிறார்கள். வேறு படங்களும் தோற்றுள்ளன. அதை பற்றி ஏன் பேசவில்லை?", என்றார் அவர்.


Click it and Unblock the Notifications











