90ml teaser: பிழைக்கத் தெரியாத பொண்ணால இருக்கு இந்த ஓவியா.. வருத்தத்தில் ரசிகர்கள்!

90 எம்எல் டீசரால் ஓவியாவிற்கு ஆதரவான மற்றும் எதிரான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Recommended Video

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம் எல் படத்தின் டீசர்-வீடியோ

சென்னை: 90 எம் எல் டீசரைப் பார்த்து விட்டு, ஓவியாவைத் திட்டுபவர்களுக்கு மத்தியில் சிலர் அவரைப் பார்த்து 'பிழைக்கத் தெரியாத பொண்ணால இருக்கு' என பரிதாபம் தெரிவித்துள்ளனர்.

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடித்த 90 எம் எல் படத்தின் டீசர் நேற்று வெளியானது. இதில் கண்ணால் பார்க்க முடியாத, காதால் கேட்க முடியாத அளவிற்கு ஆபாச வசனங்களும், காட்சிகளும் நிரம்பிக் கிடக்கின்றன.

பிக் பாஸ் வீட்டில் ஓவியா நடந்து கொண்ட விதத்தால் அவருக்கு தமிழக மக்களிடையே நல்ல செல்வாக்கு கிடைத்தது. ஒவ்வொரு வாரமும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அவர் மீதான அன்பை மக்கள் வெளிப்படுத்தினர்.

பிக் பாஸ்:

பிக் பாஸ்:

தமிழ் சினிமாவில் நடித்த போது கூட கிடைக்காத பேரும் புகழும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஓவியாவிற்கு கிடைத்தது. அவரது போலித்தனம் இல்லாத வெளிப்படையான பேச்சுக்கும், உண்மைத்தனமான நடவடிக்கைகளுக்கும் பலனாக ஓவியா ஆர்மி உருவானது. ஆனால் நிகழ்ச்சி முழுவதும் நீடிக்காமல் பாதியிலேயே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார் ஓவியா.

சிலுக்குவார்பட்டி சிங்கம்:

சிலுக்குவார்பட்டி சிங்கம்:

இரண்டாவது சீசனும் முடிவடைந்த போதும் கூட இன்னும் ஓவியாவுக்கான மவுசு குறையவில்லை. இந்தச் சூழ்நிலையில் கடந்த மாதம் அவர் நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் படம் ரிலீசானது. ஆனால் அப்படத்தில் அவர் ஏறக்குறைய குத்துப்பாட்டு நடிகையாகவே நடித்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

90 எம் எல்:

90 எம் எல்:

ஆனால் அப்படம் தான் பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதற்கு முன் நடித்தது என ஓவியா சமாளித்தார். இதனால் ஓவியா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தபின் நடித்த 90 எம் எல் படத்தை ரசிகர்கள் ஆர்வமாக எதிர்பார்த்தனர். ஆனால் அப்படமும் அவர்களை ஏமாற்றி விடும் போல.

வருத்தம்:

வருத்தம்:

நேற்று வெளியான அப்படத்தின் டீசர் ஆபாசமாக இருப்பதாக பலரும் சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். பிக் பாஸ் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு பல சர்ச்சைகளில் சிக்கிய ஐஸ்வர்யா, யாஷிகா, மஹத் போன்றவர்கள் கூட அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வருகின்றனர். ஆனால் கோடிக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற, இந்த ஓவியா பிழைக்கத் தெரியாத பொண்ணா இருக்கே என பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X