ரீ என்ட்ரி கொடுத்த ரோஜா.. சந்தனமாக நடிக்கிறாரா.. அடடே அந்த படத்துலயா?

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் குறிப்பாக 80'ஸ் மற்றும் 90'ஸ் கிட்ஸ்கள் தங்களது பால்ய காலத்து கதாநாயகர்களையும் கதாநாயகிகளையும் என்றைக்கும் விட்டுக் கொடுப்பதில்லை. அவர்களை என்றைக்கும் கொண்டாடிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதனால்தான் ரீரிலீஸ் படங்கள் எல்லாம் சக்கை போடு போடுகிறது. பல 80'ஸ் மற்றும் 90'ஸ் கதாநாயகர்கள் கதாநாயகிகள் ரீ என்ட்ரி கொடுத்ததைப் போல நடிகையும் ஆந்திராவின் முன்னால் துணை முதலமைச்சருமான நடிகை ரோஜா சினிமா உலகிற்கு மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்க உள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் மிகவும் புகழ் பெற்ற, பல தரமான மற்றும் ஹிட் படங்களை தயாரித்த நிறுவனம் என்றால் அதில் சத்ய ஜோதி பிலிம்ஸ்க்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் தயாராகவுள்ள படம் லெனின் பாண்டியன். இந்த படத்தை அறிமுக இயக்குநர் டிடி பாலச்சந்திரன் இயக்குகிறார். படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் அதாவது கதையின் மையக் கதாபாத்திரமாக நடிக்கிறார் கங்கை அமரன். கங்கை அமரன் இதற்கு முன்னர் தனது படங்களில் ஒரு நிமிடத்தில் அறிமுக வீடியோவில் மட்டும் என்ட்ரி கொடுத்து நடித்துள்ளார். அதுவும் அவர் இயக்கிய படங்களில் தான் அதுபோலச் செய்துள்ளார். இப்படி இருக்கும்போது அவரை கதையின் மையக் கதாபாத்திரமாக கொண்டு லெனின் பாண்டியன் என்ற படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

90 s Actress Roja Re Entry After 12 Years as Santhanam For Lenin Pandiyan Movie
Photo Credit:

லெனின் பாண்டியன்: இது தொடர்பான அறிவிப்பு வீடியோவை, நடிகர் சரத்குமார் பகிர்ந்து கங்கை அமரனுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பகிர்ந்த பதிவில், " இயக்குநராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்தவர், பாடலாசிரியராகவும் இசையமைப்பாளராகவும் ஜொலித்தவர் கங்கை அமரன். அவர் தனது திரை வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை நடிகராக தொடங்குகிறார். அவருக்கும் லெனின் பாண்டியன் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

90 s Actress Roja Re Entry After 12 Years as Santhanam For Lenin Pandiyan Movie
Photo Credit:

சந்தனமாக ரோஜா: படத்தின் இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியது, இந்நிலையில் படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள மற்றொரு அறிவிப்பு வீடியோ ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியிலும் கொஞ்சம் ஷாக்கிலும் ஆழ்த்தியுள்ளது. அதாவது லெனின் பாண்டியன் படத்தில் சந்தனம் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ரோஜா. 12 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். படக்குழு ரோஜாவுக்காக சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் ரோஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். நடிகை குஷ்பு ரோஜாவை வாழ்த்தி வரவேற்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X