Don't Miss!
- News
உதய்பூர் டெய்லர் கொலை நினைவு இருக்கா? அதே பகுதியில் இந்துக்கள் - இஸ்லாமியர்கள் சேர்ந்து நடத்திய விழா
- Lifestyle
ஆண்களே! உங்க அக்குள் பகுதி கருப்பா இல்லாமலும் துர்நாற்றம் இன்றியும் இருக்க நீங்க இத பண்ணா போதுமாம்!
- Automobiles
மாருதி கிராண்ட் விட்டாராவிற்கு குவியும் புக்கிங்! கம்மி விலைல வரபோது அதான் புக்கிங் 33,000 தொட்டிருக்கு!
- Technology
முதல் முயற்சி- இன்னும் 4 நாள் காத்திருந்தால் தரமான Oneplus Smartphone வாங்கலாம்!
- Finance
என்னை மன்னிச்சிடுங்க.. ஊழியர்களுக்காக கண்ணீர் விட்ட CEO.. ஏன்?
- Sports
தோனி சிறந்த விக்கெட் கீப்பரே கிடையாது.. பாக். முன்னாள் வீரர் சர்ச்சை கருத்து.. - அப்படி என்ன காரணம்?
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
இன்னும் 10 தான் இருக்கு.. இன்ஸ்டாகிராமில் சமந்தா பகிர்ந்த தகவல் எதப்பத்தி சொல்லியிருக்காங்க பாருங்க!
சிம்லா : நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ரிலீசாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
குறிப்பாக சமந்தாவின் கதீஜா கேரக்டர் மற்றும் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. அவர் நயன்தாராவை இந்தப் படத்தில் நடிப்பில் பின்னுக்கு தள்ளியுள்ளார்.
தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து அவர் குஷி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
எனக்கு
சிம்பு
தான்
வேணும்...நள்ளிரவில்
சிம்பு
வீடு
முன்
தர்ணா
செய்த
சீரியல்
நடிகை

நடிகை சமந்தா
நடிகை சமந்தா தொடர்ந்து சிறப்பான கேரக்டர்களில் நடித்து வருகிறார். விஜய், சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துள்ள இவர், இதே போல தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் யசோதா படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக ரிலீசாக உள்ளது.

வரவேற்பை பெற்ற கதீஜா கேரக்டர்
சமீபத்தில் இவரது நடிப்பில் தமிழில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் இணைந்து நடித்திருந்தார் சமந்தா. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் கதீஜா என்ற கேரக்டரில் சமந்தா நடித்திருந்தார். மற்றவர்களை காட்டிலும் படத்தில் இந்தக் கேரக்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்தியில் வரவேற்பு
இந்தியிலும் தி பேமிலி மேன் 2 சீரிசில் ராஜி என்ற கேரக்டரில் நடித்து இந்திய அளவில் பிரபலமாகியுள்ளார் சமந்தா. இடையில் அவரது விவாகரத்து அறிவிப்பு அவரை பலகீனப்படுத்திய போதிலும் தன்னுடைய கேரியரை அது பாதிக்காதவண்ணம் பார்த்துக் கொண்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் சமந்தா. தொடர்ந்து தனது படங்களின் அப்டேட்களை மட்டுமில்லாமல் புகைப்படங்கள், வீடியோக்கள், போட்டோஷுட் புகைப்படங்கள் என அனைத்தையும் பகிர்ந்து வருகிறார். இவரை ஏராளமான ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் பாலோ செய்து வருகின்றனர்.

பளு தூக்கும் பயிற்சி
தொடர்ந்து தான் செய்யும் வொர்க் அவுட் வீடியோக்களையும் சமந்தா பகிர்ந்து வருகிறார். அதன்படி தற்போது வெயிட் தூக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இதில் 90 கிலோவை தூக்கிவிட்டதாகவும் இன்னும் 10 தான் பாக்கி என்றும் தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கும் மனோபலம்
தன்னுடைய உடல் அழகை பராமரிப்பதில் எந்தவிதமான சமரசமும் செய்துக் கொள்ள மாட்டார் சமந்தா. இது அவர் தொடர்ந்து பகிர்ந்து வரும் வீடியோக்கள் மூலம் தெரியவருகிறது. இதன்மூலம் தனது மனோபலமும் அதிகரிப்பதாகவும் அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.