ஏ.ஆர்.ரஹ்மானை திருமணம் செய்ய ஆசையிருந்தது.. ஏன் மிஸ் ஆனது தெரியுமா?.. 90ஸ் நடிகை ஓபன் டாக்
சென்னை: இசைப்புயல் என கொண்டாடப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் சர்வதேச அளவில் ரசிகர்களை கொண்டிருப்பவர். மேலும் ஆஸ்கர், கிராமி உள்ளிட்ட விருதுகளையும் வென்றிருக்கிறார். தமிழில் அவர் கடைசியாக காதலிக்க நேரமில்லை, தக் லைஃப் ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். அடுத்ததாக மூன்வாக் திரைப்படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்நிலையில் ரஹ்மானை திருமணம் செய்துகொள்ள ஆசையிருந்ததாக 90ஸ் நடிகை ஒருவர் ஓபனாக கூறியிருக்கிறார்.
ரோஜா படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான ஏ.ஆர்.ரஹ்மான் முதல் படத்திலிருந்தே அனைவரது கவனத்தையும் ஈர்த்துவிட்டார். அடுத்தடுத்து அவர் இசையமைத்த படங்களில் யார் இந்த பையன் எனவும் கேட்க வைத்தார். அதேசமயம் கணினியை வைத்துதான் அவர் இசையமைக்கிறார் என்றும் விமர்சனங்கள் எழுந்தன. அதற்கு ரஹ்மானோ கிழக்கு சீமையிலே, கருத்தம்மா உள்ளிட்ட மண் சார்ந்த படங்களுக்கும் இசையமைத்து; தன்னால் எந்த மாதிரியான இசையையும் கொடுக்க முடியும் என பொட்டில் அடித்து நிரூபித்தார்.

பாலிவுட் டூ ஹாலிவுட்: தமிழில் அவருக்கு கிடைத்த ஏகபோக ரெஸ்பான்ஸ் உடனடியாக பாலிவுட் கதவுகளையும் திறந்து வைத்தது. அங்கே சென்று ரங்கீலா உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வெற்றி பெற்று அங்கிருந்து ஹாலிவுட்டுக்கு சென்றார். கோலிவுட்டில் திரை பயணத்தை ஆரம்பித்து ஹாலிவுட்வரை சென்ற ரஹ்மானை பார்த்து ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமையும், ஆச்சரியமும்தான் பட்டது. ஹாலிவுட் சென்ற கையோடு ஆஸ்கர் விருதையும் வென்று வந்தார்.
தமிழில் பிஸி: இப்படி தொடர்ச்சியாக அனைத்து Woodகளுக்கும் இசையமைத்துவருகிறார். கடைசியாக தமிழில் அவர் தக் லைஃப், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களுக்கு இசையமைத்தார். அந்தப் படங்கள் சுமாரான வரவேற்பை பெற்றாலும்; வழக்கம்போல் ரஹ்மானின் பாடல்களும் பின்னணி இசையும் பட்டையை கிளப்பின. அடுத்ததாக பிரபுதேவா நடிப்பில் மூன் வாக் திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அதில் இடம்பெற்றிருக்கும் டிங்கா என்ற பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஒலிக்கிறது. இப்போதைய ஜென் ஜி தலைமுறைக்கு ஏற்ற இசையை அவரால் வழங்க முடியாது என எழுந்த விமர்சனங்களுக்கும் இதில் பதில் கொடுத்திருக்கிறார் அவர்.
நடிகை பேட்டி: இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் பற்றி 90களில் பிரபலமாக இருந்த நடிகை மோகினி ஒரு பேட்டியில் பேசியிருப்பது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அவர் அந்தப் பேட்டியில், "ஏ.ஆர்.ரஹ்மானின் திவீர ரசிகை நான். சாதாரணமான ரசிகையெல்லாம் இல்லை. அவர் மீது வெறித்தனமான அன்பில் இருந்தேன். அவர் இஸ்லாமிய மதத்துக்கு மாறியது என்க்கு பெரிய வருத்தத்தை கொடுத்தது. அப்போது நான் ஹிந்துவாக இருந்தேன்.
அதுவே போதுமானதாக இருந்தது: திலீப் என்ற அவருடைய பெயரே எனக்கு போதுமானதாக இருந்தது. ஏ.ஆர்.ரஹ்மான் திலீப்பாகவே இருந்திருக்கலாம். அவர் மதம் மட்டும் மாறாமல் இருந்திருந்தால், 'எனக்கு ரஹ்மானை பிடித்திருக்கிரது. அவரையே திருமணம் செய்துகொள்கிறேன்' என வீட்டில் சம்மதம் வாங்குவதற்கு வசதியாக இருந்திருக்கும். அவர் என்னைவிட வயது குறைவானவர் என்பது தெரியும். அவரை எந்த சண்டை, சச்சரவு இல்லாமல் திருமணம் செய்ய பிளான் செய்திருந்தேன்" என்றார்.
ரஹ்மானின் பெர்சனல் வாழ்க்கை: முன்னதாக, ஏ.ஆர்.ரஹ்மான் சாய்ரா பானுவை திருமணம் செய்திருந்தார். பல வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த அவர்கள் சில வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார்கள். ரஹ்மானை பிரிந்தாலும் அவர் போல் ஒரு கணவர் யாருக்கும் கிடைக்கமாட்டார் என சாய்ரா தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications















