'ஒரு வீடு இரு வாசல்' நடிகையா இது?.. பரங்கிமலா சூரியா இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
சென்னை: கே.பாலசந்தர் இயக்கிய "ஒரு வீடு இரு வாசல்" படத்தை அவ்வளவு சுலபமாக யாரும் மறந்து இருக்க முடியாது. அந்த படத்தில் எதார்த்தமான அழகு, இயல்பான நடிப்பால் மனதில் இடம் பிடித்தவர் தான் பரங்கிமலா சூரியா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்த அந்த நடிகை இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?
பரங்கிமலா சூரியா சென்னையில் 1967ஆம் ஆண்டு பிறந்தார். இவரின் உண்மையான பெயரும் சூர்யா தான். தமிழ் பெண்ணான இவர், சென்னையில். விவேகானந்தா பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்துவ ந்த போது தான் முதல் முதலில் 'ஜெய் ஜவான்' நாடகத்தில் எஸ்.வி.சேகருடன் நடித்தார். அதன் ன் தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்துள்ளார். இந்நாடகத்தை பார்த்த பிரபல மலையாள இயக்குநர் பரதன் ''பரங்கிமலா'' என்கிற படத்தில சூரியாவை கதாநாயகியாக அறிமுகம் செய்தார். முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரதிலயம், பூச்சைக்கொரு மூக்குத்தி, வனிதா போலீஸ், சமாதாரம் போன்ற படங்களில் நடித்தார்.

நடிகை பரங்கிமலா சூரியா: மலையாளப்படங்களில் தொடர்ந்து நடித்து வந்த இவர், தமிழில் பொண்ணு புடிச்சிருக்கு படத்தில் வில்லியாக நடித்து பெயர் எடுத்தார். அதன் பின் தமிழில் கே. பாலசந்தர் இயக்கத்தில் வெளியான "ஒரு வீடு இரு வாசல்" படத்தில் ஒரு முக்கியமான ரோலில் நடித்திருந்தார் நடிகை சூர்யா. அந்த படத்தில் பார்வையால் பல வலிகளை இயல்பாக படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அனுராதா ரமணனின் நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம், பிற சமூகப் பிரச்சனைகள் சார்ந்த சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை வென்றது.

அந்த நடிகையாக இது: 1980கள் மற்றும் 1990களில் தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளப்படங்களில் கொடி கட்டிப்பறந்த பரங்கிமலா சூரியா பல ஆண்டுகளாக சினிமா, சீரியல் என எதிலும் தலைக்காட்டாமல் இருந்தார். தற்போது இவர் கேரளாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த போது எடுத்த வீடியோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த பலர் அந்த நடிகையா இவர் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications