Malavika: வயசானாலும் அந்த 'வாளை மீன்' வசீகரம் குறையல! காக்டைலை மென்ஷன் செய்து மாளவிகா போட்ட போஸ்ட்
சென்னை: தமிழ் சினிமாவில் 90-களின் இறுதியில் இளைஞர்களின் தூக்கத்தை திருடிய கனவுக்கன்னிகளில் முதன்மையானவர் நடிகை மாளவிகா. உன்னைத் தேடி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அறிமுகமான போதே, தனது வசீகரமான சிரிப்பால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போட்டவர். என்னதான் பல படங்களில் நடித்திருந்தாலும், சித்திரம் பேசுதடி படத்தில் வந்த 'வாளை மீனுக்கும் விலங்கு மீனுக்கும்' என்ற ஒற்றைப் பாடல் இவரை பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. இன்றும் அந்தப் பாடல் ஒலிக்கும் இடங்களில் மாளவிகாவின் துள்ளலான நடனம் தான் நம் நினைவுக்கு வரும். இப்படியான நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதே வாளை மீன் ஸ்டைலில் மஞ்சள் நிற உடையிலான புகைப்படங்களை இறக்கி உள்ளார்.
ஆரம்ப காலத்தில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்த மாளவிகா, ஒரு கட்டத்தில் கிளாமர் ரூட்டுக்கு மாறினார். ரஜினியுடன் 'சந்திரமுகி', கமலுடன் 'வசூல் ராஜா MBBS' எனப் பெரிய ஸ்டார்களுடன் நடித்திருந்தாலும், முன்னணி கதாநாயகி அந்தஸ்தை தக்க வைக்க போராடினார். அந்தச் சமயத்தில் தான் திருமண வாழ்க்கையில் காலடி எடுத்து வைத்த மாளவிகா, திரையுலகை விட்டு மெல்ல விலகி குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆனார். ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இப்போது மீண்டும் அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறது.

ஃபேமிலி லைஃப்: தற்போது லண்டனில் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் மாளவிகா, சமூக வலைதளங்களில் செம ஆக்டிவ். 40 வயதைக் கடந்த பின்னரும், இன்னும் அதே பழைய 'உன்னைத் தேடி' மாளவிகா போலவே மின்னுகிறார். அவர் பகிரும் லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், "காலம் மாறினாலும் உங்க அழகு மட்டும் மாறவே இல்லையே" என கமெண்ட் செய்து வருகின்றனர். இப்போதும் அவர் ஜிம்மில் வொர்க்-அவுட் செய்யும் வீடியோக்கள் மற்றும் யோகா செய்யும் புகைப்படங்கள் இளசுகளைச் சுண்டி இழுத்து வருகின்றன.
அதே வாளை மீன் வசீகரம்: பல முன்னணி நடிகைகள் இப்போது குணச்சித்திர வேடங்களில் ரீ-என்ட்ரி கொடுத்து வரும் நிலையில், மாளவிகாவும் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. என்னதான் புதுப்புது நடிகைகள் வந்தாலும், 90-ஸ் கிட்ஸ்களின் 'பேவரைட்' லிஸ்டில் மாளவிகாவிற்கு என்று எப்போதும் ஒரு தனி இடம் உண்டு என்பதுதான் நிதர்சனம். இப்படி இருக்கையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வாளை மீன் ஸ்டைலில் மஞ்சள் நிற உடையிலான புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார். தனது புகைப்படங்களுக்கு சூரியனைவிட சூடாகவும் காக்டைல்ஸை விட குளிர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று கேப்ஷனிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











