சின்ன ராசாவே கட்டெறும்பு.. 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஹீரோயின்.. சுகன்யா ஆட்டத்தை பாருங்கப்பா
சென்னை: 90களில் கமல், பிரபு, கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ் என டாப் ஸ்டார் நடிகர்களின் படத்தில் ஹீரோயினாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தவர் சுகன்யா. ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் இருந்திருக்கிறார். இந்நிலையில், பிரபல தொலைக்கா்டசியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் நிகழ்ச்சியில் நடனம் ஆடியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. அதுவும் எந்த பாட்டு தெரியுமா? அனைத்து தரப்பு ரசிகர்களை கவர்ந்த பாடலாகவும், சுகன்யாவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு போய் சேர்த்த பாடலாகவும் அது இருக்கிறது.
தமிழ் சினிமா பல ஹீரோயின்களை பார்த்திருக்கிறது. குறிப்பாக 90களில் வந்த நடிகைகளில் உச்சம் தொட்ட நடிகை சுகன்யா. பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புதுநெல்லு புதுநாத்து படத்தில் படத்தில் நடிகையாக அறிமுகம் ஆனார். அவர் நடித்த முதல் படமே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெற்றி அடைந்தது. காதோரம் லோலாக்கு இவர் ஆடிய பாடல்கள் என அனைத்திலும் சிறப்பிடம் தான். ரசிகர்களுக்கு பிடித்த ஃபேவரட் ஹீரோயினாக மாறியதும் இப்படித்தான். சுகன்யா ஒரு கிளாசிக் டான்சரும் கூட. அவரது அப்பா சினிமா தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார்.

கிசுகிசு: சினிமா துறையில் நடிகர்களை காட்டிலும் அதிகம் நடிகைகள் தான் கிசுகிசுக்களில் சிக்குவார்கள். அந்த வகையில் இவர் பெயருக்கு பின்னால் ஒரு அமைச்சரின் பெயர் அடிபடுவதை அடிக்கடி கேள்விப்படுவதுண்டு. சுகன்யா என்று சொன்னால் அந்த பெயரும் பின்தொடரும். இவர் படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே அரசியல்வாதியினுடன் நட்புடன் பழகியதாகவும், பின்னாளில் அது நெருக்கமானதாகவும் கிசிகிசுக்கப்படுகிறது. குறிப்பாக பிரபல நடிகர் தொடங்கிய கட்சியில் அவர் அமைச்சராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. தற்போது ஆளும் கட்சியிலும் அவர் அமைச்சராகவும் இருக்கிறாராம். இதுகுறித்த செய்திகள் வருவதை பார்த்தாலும் சுகன்யா தரப்பில் மறுப்பு தெரிவித்ததில்லை.
திருமண வாழ்க்கை: சமீபத்தில் நடிகை சுகன்யா ஒரு குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் அதிகம் வைரலானது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் விவகாரத்தான நடிகை சுகன்யா தனது மகளை தனியாக வளர்த்து வருவதாகவும் தெரிவித்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் நடிகை சுகன்யா சிரித்து கொண்டே அது என் குழந்தை இல்லைங்க.. என் அக்கா குழந்தை என தெரிவித்திருக்கிறார். தனது திருமண வாழ்க்கை குறித்து பேசிய சுகன்யா, எனக்கு கல்யாண வாழ்க்கை ஒரு வருடம் கூட நீடிக்கவில்லை. அதற்குள் குழந்தை என்று சொல்வது ரொம்ப வருத்தமாக இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்.

சின்ன கவுண்டர் சுகன்யா: புது நெல்லு புது நாத்து படத்திற்கு பிறகு சுகன்யாவிற்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்த படம் சின்னக்கவுண்டர். விஜயகாந்த் டான்ஸ் ஃபைட்டு என்று ஒரு பக்கம் ஸ்கோர் செய்திருப்பார். ஆனால், இப்படத்தில் சுகன்யா லெவலுக்கு யாரும் நடித்திருக்க முடியாது. இப்படத்தில் நடிகை மனோராமாவுக்கு இணையாக கொங்கு தமிழில் பேசி சுகன்யா அசத்தியிருப்பார். குறிப்பாக விஜயகாந்த் தோட்டத்துல புளி திருடுவது, மனோரமாவுடன் ஏட்டிக்குப் போட்டியா வாய்சவடால் விடுவது, விஜயகாந்த்துடன் பம்பரம் விடுற போட்டி, மொய் விருந்து வைப்பது, பிறக்கு விஜயகாந்திற்காக கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போறதுனு ஒவ்வொரு சீன்லயுமே தேர்ந்த நடிகையா ஸ்கோர் பண்ணியிருப்பார். இந்த படம் பார்த்த பலரும் சுகன்யாவை பார்த்து இந்த படம் உன்னை எங்கேயோ காெண்டு போய் சேர்க்க போகிறது எனவும் தெரிவித்திருக்கின்றனர். அவர்கள் கூறியது போலவே சுகன்யாவை முன்னணி நடிகையாகவும் மாற்றியது.

சின்னராசாவே பாடல்: சினிமாவிற்கு பிரேக் கொடுத்திருக்கும் சுகன்யா தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் Jodi Are you Ready டான்ஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக நடுவராக சுகன்யா அறிமுகம் ஆகியுள்ளார். இவர் அறிமுகம் ஆன முதல் நிகழ்ச்சியிலேயே இப்படியா பட்டைய கிளப்புவது என ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டுள்ளனர். சாண்டி மாஸ்டருடன் சேர்ந்து சின்ன ராசாவே பாடலுக்கு நடனம் ஆடியிருக்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது. பிரபு தேவா மாஸ்டரையை கலங்கடித்தவங்க சாண்டி மாஸ்டரெல்லாம் எம்மாத்திரம் என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர். சின்ன ராசாவே கட்டெறும்பு பாடல் பட்டி தொட்டியெங்கும் கலக்கியது. இன்றைக்கும் இந்த பாடலின் நடனத்திற்கு தனி ரசிகர்களே இருக்கின்றனர். அப்படி இருக்கையில் மீண்டும் ரீ கிரியேட் செய்து சுகன்யா ஆடும் நடனத்தை பார்த்து நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர். சுகன்யா மேடத்திற்கு வயசு ஆகவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதுதான் பா டான்ஸ் நீங்களும் ஸ்டெப் போடுறிங்க. சுகன்யாவிடம் கத்துக்கோங்கப்பா என கூற தொடங்கிவிட்டனர்.


Click it and Unblock the Notifications











