அநாகரீக கேள்விகள்.. எனக்கு நடந்தது Harrassmentதான்.. கௌரி கிஷன் ஓபன்.. சரவெடியா வெடிச்சிட்டாங்க

சென்னை: 96 படத்தில் நடித்து புகழ் பெற்ற கௌரி கிஷன் இப்போது தமிழில் வளர்ந்துவரும் நடிகை. சிறப்பான நடிகை என்று பெயர் எடுத்திருக்கும் அவர் அதர்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படக்குழுவினர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார்கள். அப்போது யூடியூபர் ஒருவர் கௌரியின் உடல் எடை குறித்து கேட்டது பெரும் சர்ச்சையானது. அங்கேயே வைத்து அவருக்கு தரமான பதிலடி கொடுத்த கௌரி; அதனையடுத்து தனியார் ஊடகத்துக்கு மனம் திறந்து பேசியிருக்கிறார்.

பிரேம்குமார் இயக்கிய 96 படத்தில் சின்ன வயது ஜானுவாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் கௌரி கிஷன். அழகு, நடிப்பு என இரண்டையும் கொண்டிருக்கும் அவருக்கு அந்தப் படத்தின் வெற்றி பல வாய்ப்புகளை பெற்றுக்கொடுத்தது. அப்படி அவர் மாஸ்டர், கர்ணன், புத்தும்புது காலை விடியாதா, உலகம்மை, போட் என ஏராளமான தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். மேலும் தெலுங்கு மொழியிலும் நடித்திருக்கிறார்.

அதர்ஸ்: தமிழில் இப்போது அதர்ஸ் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதனை அபின் ஹரிஹரன் என்பவர் இயக்க ஹீரோவாக ஆதித்யா மாதவன் நடித்திருக்கிறார். மேலும் அஞ்சு குரியன் உள்ளிட்டோரும் நடித்திருக்கும் இப்படமானது நேற்று ரிலீஸானது. த்ரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் இப்படத்தில் மருத்துவர் ரோலை ஏற்றிருக்கிறார் கௌரி. சூழல் இப்படி இருக்க நேற்றி பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு.

96 Fame Gouri Kishan Faces Body-Shaming Question at Press Meet she Calls It Harassment
Photo Credit:

அநாகரீக கேள்விகள்: அந்த பத்திரிகையாளர் சந்திப்பின்போது 50 வயது மதிக்கத்தக்க யூடியூபர் ஒருவர் கௌரியின் உடல் எடை குறித்து கேள்வி எழுப்பினார். ஏற்கனவே கடந்த வாரத்திலும் இதே கேள்வியை அவர் முன்வைத்ததாக தெரிகிறது. இதனால் கடுப்பான கௌரி அந்த இடத்திலேயே வைத்து அவரை விளாசிவிட்டார். ஆனாலும் அந்த யூடியூபரோ தனது தவறை உணர்ந்ததாகவே தெரியவில்லை. இந்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

குவியும் ஆதரவு: அந்த யூடியூபர் அப்படி கேட்டதற்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து கௌரிக்கு ஆதரவாக பேசிவருகிறார்கள். இயக்குநர் பா. இரஞ்சித், நடிகை குஷ்பூ, தென்னிந்திய நடிகர் சங்கத்தினர் என பலரும் அவருக்கு தோள் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பிரபல் தனியார் ஊடகத்திடம் மனம் திறந்து பேசியிருக்கிறார் கௌரி.

கௌரியின் பேட்டி: அவர் அந்தப் பேட்டியில், "அந்த நபர் கடந்த வாரமே இதே கேள்வியை என்னிடம் கேட்டார். ஆனால் அப்போது அங்கிருந்தவர்கள் சிரித்துவிட்டு கடந்து சென்றுவிட்டார்கள். அதற்கு பிறகு ஒரு பேட்டியில் எதார்த்தமாக இதுகுறித்து பேசினேன். உடனே அவர் இப்போதைய பத்திரிகையாளர் சந்திப்பிலும் அப்படியே கேட்டார். இது முட்டாள்த்தனமான கேள்வி என்று நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை. மாறாக இது ஒரு ஜோக்தான் என்று கூறினார். அது எனக்கு ஜோக்காக தெரியவில்லை.

என்னை டார்கெட் செய்தார்: அவர் என்னை டார்கெட் செய்தார்தான். எனக்கு நடந்தது Harrassmentதான். ஏன் ஹீரோயின்களிடம் இப்படித்தான் கேள்வி கேட்க வேண்டுமா. ஹீரோவிடம் இப்படி கேட்பார்களா?.. அவர் பூமர் அங்கிள் போல் பேசினார். என்னிடம் ட்ரம்ப் பற்றியா கேட்க முடியும் என சொல்கிறார். ஏன் கேளுங்களேன். எங்களுக்கெல்லாம் மூளை இல்லையா?. நாங்கள் செய்தியெல்லாம் படிக்கமாட்டோமா?.. இவர் போன்றவர்களால்தான் மீடியா துறையே இன்று பலரால் திட்டப்படுகிறது. இவரெல்லாம் இதிலிருந்து வெளியே சென்றுவிட வேண்டும்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X