வெல்வெட் ட்ரெஸ்ஸில்.. வேற லெவலில்.. ஜொலிக்கும் 96 குட்டி ஜானு.. இதயத்தை பறக்கவிடும் ஃபேன்ஸ்!
சென்னை : விஜய் சேதுபதி, த்ரிஷா இணைந்து நடித்திருந்தார் 96 திரைப்படத்தில் குட்டி ஜானுவாக நடித்து அனைவரது பாராட்டுகளையும் பெற்றவர் நடிகை கௌரி கிஷான் .
மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து தற்போது தனுஷ் நடித்து வரும் கர்ணன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விரைவில் தமிழில் கதாநாயகியாக களமிறங்க காத்துக்கொண்டிருக்கும் கௌரி கிஷான் இப்பொழுது வெல்வெட் ட்ரெஸ்ஸில் வெள்ளாவி வச்சு வெளுத்தது போல வேற லெவல் அழகில் ஜொலிக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் இதயங்களில் நிரம்பி வழிகிறது.

இளம் ரசிகர் பட்டாளங்களை
சமீபத்திய குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனது க்யூட்டான நடிப்பினால் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை கௌரி கிஷான் இப்பொழுது மலையாளத்தில் கதாநாயகியாக சில படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். தமிழில் இதுவரை சிறு சிறு கதாபாத்திரங்களில் மட்டும் நடித்து வரும் இவருக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்க இப்பொழுதே எக்கச்சக்கமான இளம் ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ளார்.

கிராமத்து பெண் போலவே
96 படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் நடித்திருந்த கௌரி கிஷான் தற்போது தனுஷின் கர்ணன் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார். இதுவரை கல்லூரி மற்றும் பள்ளி படிக்கும் பெண்ணாக மட்டுமே நடித்து வந்த இவர் இதில் கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார். கர்ணன் படப்பிடிப்பில் எடுத்த சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி இருந்தது அதில் கௌரி கிஷான் பார்ப்பதற்கு அச்சு அசல் கிராமத்து பெண் போலவே காட்சியளித்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாகிறது
அனுகிரகீதன் ஆண்டனி என்ற மலையாள படத்தில் கௌரி கிஷான் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படம் வரும் மார்ச் 26 ஆம் தேதி ரிலீசாகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் தடபுடலாக நடந்து வர இந்த படம் கௌரிக்கு மலையாள திரையுலகில் மிகப் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் என தெரிகிறது.

வெல்வெட் ட்ரெஸ்ஸில்
தமிழிலும் எக்கச்சக்கமான ஹீரோயின் வாய்ப்புகள் தொடர்ந்து வந்த வண்ணமே இருக்க சரியான கதைக்காக காத்துக்கொண்டிருக்கும் கௌரி கிஷான் இப்பொழுது வெல்வெட் ட்ரெஸ்ஸில் வெள்ளாவி வச்சு வெளுத்தது போல வெள்ளை வெளேரென வேற லெவலில் ஜொலிக்கும் புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்க அதை பார்த்த ரசிகர்கள் இதயத்தை பறக்க விட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











