தீபாவளிக்கு சன் டிவியில் 96 படத்தை போடக் கூடாது: த்ரிஷா #Ban96MoviePremierOnSunTv
Recommended Video

சென்னை: 96 படத்தை சன் டிவியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்கிறார் த்ரிஷா.
பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 96 படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 96 படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டமாக உள்ளது.
இந்நிலையில் 96 படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

சன் டிவி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக உங்கள் சன் டிவியில் செவ்வாய்க்கிழமை மாலை 96 படம் ஒளிபரப்பப்படுகிறது என்று விளம்பரம் போடத் துவங்கிவிட்டனர். இதை பார்த்து த்ரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார்.
த்ரிஷா
படம் ரிலீஸாகி இது 5வது வாரம். தியேட்டர்களில் 80 சதவீத இருக்கைகள் நிரம்புகிறது. இந்நிலையில் 96 படத்தை டிவியில் ஒளிபரப்புவது சரியில்லை என்று 96 படக்குழு நினைக்கிறது. அதனால் படத்தை பொங்கலுக்கு ஒளிபரப்புமாறு சன் டிவியை கேட்டுக் கொள்கிறோம் என்று த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #96thefilm #Ban96MoviePremierOnSunTv
ஆதரவு
96 படத்தை தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பக் கூடாது என்ற த்ரிஷாவின் கோரிக்கைக்கு ரசிகர்களிடையே ஆதரவு கிடைத்துள்ளது.
புதுப்படம்
டிவியில் போட எத்தனையோ படங்கள் இருக்க 96 படத்தை ஏன் அவசர அவசரமாக போட வேண்டும்?


Click it and Unblock the Notifications











