twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபாவளிக்கு சன் டிவியில் 96 படத்தை போடக் கூடாது: த்ரிஷா #Ban96MoviePremierOnSunTv

    By Siva
    |

    Recommended Video

    தீபாவளிக்கு சன் டிவியில் 96 படத்தை போடக் கூடாது: த்ரிஷா பகிரங்க எதிர்ப்பு- வீடியோ

    சென்னை: 96 படத்தை சன் டிவியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்கிறார் த்ரிஷா.

    பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான 96 படம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 96 படம் ஓடும் தியேட்டர்களில் இன்னும் கூட்டமாக உள்ளது.

    இந்நிலையில் 96 படம் சன் டிவியில் ஒளிபரப்பப்பட உள்ளது.

    இன்று நிறைவேறிய ஷங்கரின் 4 ஆண்டு கனவு: மெய்சிலிர்த்த ரஜினி, ரஹ்மான்இன்று நிறைவேறிய ஷங்கரின் 4 ஆண்டு கனவு: மெய்சிலிர்த்த ரஜினி, ரஹ்மான்

    சன் டிவி

    சன் டிவி

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக உங்கள் சன் டிவியில் செவ்வாய்க்கிழமை மாலை 96 படம் ஒளிபரப்பப்படுகிறது என்று விளம்பரம் போடத் துவங்கிவிட்டனர். இதை பார்த்து த்ரிஷா அதிர்ச்சி அடைந்துள்ளார்.

    த்ரிஷா

    படம் ரிலீஸாகி இது 5வது வாரம். தியேட்டர்களில் 80 சதவீத இருக்கைகள் நிரம்புகிறது. இந்நிலையில் 96 படத்தை டிவியில் ஒளிபரப்புவது சரியில்லை என்று 96 படக்குழு நினைக்கிறது. அதனால் படத்தை பொங்கலுக்கு ஒளிபரப்புமாறு சன் டிவியை கேட்டுக் கொள்கிறோம் என்று த்ரிஷா ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #96thefilm #Ban96MoviePremierOnSunTv

    ஆதரவு

    96 படத்தை தீபாவளிக்கு சன் டிவியில் ஒளிபரப்பக் கூடாது என்ற த்ரிஷாவின் கோரிக்கைக்கு ரசிகர்களிடையே ஆதரவு கிடைத்துள்ளது.

    புதுப்படம்

    டிவியில் போட எத்தனையோ படங்கள் இருக்க 96 படத்தை ஏன் அவசர அவசரமாக போட வேண்டும்?

    English summary
    Actress Trisha tweeted that, 'Its our 5th week and we still have an 80% occupancy in all theatres.We as a team feel its unfair to be premiering 96 this early. Its our request to push it to a Pongal viewing pls SunTV Will be grateful #96thefilm #Ban96MoviePremierOnSunTv'
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X