Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பௌர்ணமி நிலவு போல தகதகன்னு மின்னும் குட்டி ஜானு!
சென்னை : 96 திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை கௌரி கிஷன். இப்பொழுது மலையாளம் மற்றும் தெலுங்கில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
மிக விரைவிலேயே தமிழிலும் கதாநாயகியாக நடிக்க உள்ள கௌரி கிஷன் பௌர்ணமி நிலவு போல தகதகன்னு மின்னும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.
தமிழ் பற்றி பேசுவதில் அரசியல் இல்லை...விளக்கம் தந்த கமல்
திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில்
எந்த திரைப்படம் ஆனாலும் எந்த கதைக்களம் ஆனாலும் அதை தன்னுடைய பாணியில் மிக நேர்த்தியாக செய்து முடிக்கக்கூடிய நடிகர் விஜய் சேதுபதி மனம் பொங்கும் காதல் கதையில் நடித்திருந்த திரைப்படம் 96. இதில் கதாநாயகியாக திரிஷா நடித்திருந்தார். பள்ளி காதலர்கள் மற்றும் நண்பர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் கெட் டு கெதர் மூலம் சந்திப்பதை மிக அழகாக இந்த திரைப்படம் காட்டிருந்தது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இதில் திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் குட்டி ஜானுவாக கௌரி கிஷன் நடித்து தமிழில் அறிமுகம் செய்யப்பட்டார்.
மலையாளத்தில் கதாநாயகியாக
நடித்த முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கௌரி கிஷன் அதைத் தொடர்ந்து மாஸ்டர் மற்றும் கர்ணன் என முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் முக்கியமான வேடங்களில் நடித்தார். இப்பொழுது மலையாளத்தில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார் . மலையாளத்தில் கதாநாயகியாக நடித்திருந்த அனுகிரகீதன் ஆண்டனி சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
ஸ்ரீதேவி ஷோபன் பாபு
96 திரைப்படம் தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அதிலும் குட்டி ஜானுவாக நடித்து அசத்தி இருந்தார். இப்பொழுது மலையாளத்தைத் தொடர்ந்து தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார். சந்தோஷ் ஷோபன் இதில் கதாநாயகனாக நடித்த ஜோடியாக கௌரி கிஷன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தை சுஷ்மிதா கொனிடெல்லாவின் கோல்டு பாக்ஸ் என்டர்டைன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு "ஸ்ரீதேவி ஷோபன் பாபு" என டைட்டில் வைக்கப்பட்டிருக்க ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் சிரஞ்சீவியால் வெளியிடப்பட்டது.
சிம்பிளான உடையில் சிலாகிக்கும்
மலையாளம் மற்றும் தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் எப்பொழுது கௌரி கிஷன் கதாநாயகியாக அறிமுகமாவார் என தமிழ் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்க பிரபல இளம் நடிகருக்கு ஜோடியாக கௌரி நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டுள்ளது விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கௌரி கிஷன் கவர்ச்சியில்லாத புகைப்படங்களை வெளியிட்டு வைரல் ஆகி வருகிறார் அந்த வகையில் இப்பொழுது பௌர்ணமி நிலவு போல தகதகன்னு மின்ன சிம்பிளான உடையில் சிலாகிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களால் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.