இந்த வருஷம் தீபாவளிக்கு த்ரிஷா ட்ரெஸ் தான் சாய்ஸ்: களைகட்டுகிறது விற்பனை

96 திரைப்படத்தின் த்ரிஷா அணிந்த ஆடைகள் பேஷன் உலகில் ட்ரெண்ட் ஆகி வருகிறது

Recommended Video

96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க!- வீடியோ

சென்னை: 96 திரைப்படத்தில் த்ரிஷா பயன்படுத்தியது போன்ற உடை விற்பனைக்கு வந்துள்ளது.

திரைப்படத்தில், தொலைக்காட்சியில் ஒரு ஸ்டைல் உருவாகிறது, ட்ரெண்ட் ஆகிறது என்றால் அதை பேஷன் உலகும் உபயோகித்துக்கொள்ளும். ஹாலிவுட் கதாபாத்திரங்களான சூப்பர் மேன், ஸ்பைடர் மேன் போன்றவற்றின் ஆடைகள் ரசிகர்களால் விரும்பி வாங்கப்படுகின்றன.

96 Trisha costume trending!

அதுபோல் தமிழ் சினிமாவிலும், மாஸ் ஹீரோக்களின் படங்களின் பெயர் பொறித்த ஆடைகளை ரசிகர்கள் அணிந்து ஆதரவு தெரிவிப்பர்.

சில வருடங்களுக்கு முன்பு ஜோதிகா புடவை என்று ஒன்று பெண்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. இப்போது 96 திரைப்படத்தில் த்ரிஷா அணிந்திருந்தது போன்ற உடைகள் பரவலாக விற்பனைக்கு வரத் தொடங்கியுள்ளன.

பள்ளிப்பருவ காதலில் மூழ்கடிக்கும் அற்புதப் படமாக 96 இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொருவருமெ த்ரிஷாவின் ஜானு மற்றும் விஜய் சேதுபதியின் ராம் கதாபாத்திரத்தை அவர்களின் பள்ளிக் காதலை மீட்டுவரும் மீட்பர்களாகப் பார்க்கிறார்கள்.

அதனால் அப்படத்தில் த்ரிஷா அணிந்த ஆடைகள் புது பேஷனாக விற்பனைக்கு வந்துள்ளது. அதிலும் குறிப்பாக அந்த மஞ்சள் நிற டாப், நீல நிற ஷால் மற்றும் ஜீன்ஸ் அதிகம் விரும்பப்படுவதாக உள்ளது. இந்த விஷயத்தை மகிழ்ச்சியாக ட்வீட் செய்துள்ளார் த்ரிஷா.

இதுதான் ஒரு கதாபாத்திரம் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்பதற்கு சான்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X