என் படுக்கைக்கு மட்டும் தான் ஆண் தேவை.. சர்ச்சையை ஏற்படுத்திய பேச்சு.. முற்றுபுள்ளி வைத்த தபு!
சென்னை: காதல் தேசம், கண்டுகொண்டு கண்டுகொண்டேன் போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் தான் நடிகை தபு. தற்போது இவர், அஜய் தேவ் கன்னுடன் 'த்ரிஷ்யம் 3' படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் தபு, ஆண்கள் குறித்து சொன்ன தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில் இதுகுறித்து தபு விளக்கம் அளித்துள்ளார்.
சோஷியல் மீடியாவின் வளர்ச்சியால், பிரபலமான திரைப்பட நட்சத்திரங்களின் பெயரில் தவறான செய்திகளும், அறிக்கைகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. பெரும்பாலும் நல்ல செய்தியை விட, நெகட்டிவான செய்திகள் துரதிர்ஷ்டவசமாக வைரலாகி விடுகின்றன. அப்படி ஒரு சர்ச்சையில் தான் நடிகை தபு தற்போது சிக்கி உள்ளார். அதாவது, தபு சொன்னதாக ஒரு செய்தி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அதில், படுக்கையறையை தவிர, தன் வாழ்க்கைக்கு ஒரு ஆண் தேவையில்லை என்று கூறியதாக செய்தி வெளியானது. இந்தக் கருத்துக்கு இணையத்தில் பலவிதமான எதிர்ப்புகள் எழுந்தன. சிலர் இது துணிச்சலான கருத்து என பராட்டினாலும், இது தரமற்றது பேச்சு என்றும், நடிகை தபுவின் இந்த கருத்து அவரின் இமேஜுக்குக் கேடு விளைவிக்கும் என்று சொல்லப்பட்டது.

பொய்யான செய்தி: இப்படி தபு குறித்து இணையத்தில் பரவி வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள நடிகை தபு. இந்தக் கூற்றை முழுமையாக மறுத்துள்ளார். நான் இதுபோன்ற எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை, எந்த ஊடகத்திலும் பேசவில்லை அது முற்றிலும் போலியான செய்தி, இதுபோன்ற சர்ச்சையான செய்திகளை வெளியிடும் போது, செய்தி ஊடங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், உண்மையா என்பதை தெளிவுபடுத்திவிட்டு அதை பதிவிட வேண்டும் என கூறியுள்ளார்.
தனிமையில் தபு: 54 வயதாகும் தபு இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் தனிமையில் வாழ்ந்து வருகிறார். தெலுங்கு மற்றும் இந்தி என இரண்டிலும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது தபு, பூரி ஜெகன்நாத்தின் 'ஸ்லம்டாக்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அதில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்கிறார். அதே போல, அஜய் தேவ் கன்னுக்கு ஜோடியாக த்ரிஷ்யம் 3 படத்தில் நடித்து வருகிறார். அப்படம் அக்டோபர் 2ந் தேதி வெளியாக உள்ளது.


Click it and Unblock the Notifications











