ஓவியத்துக்கே ஓவியமா.. அசத்திய ரசிகர்.. புல்லரித்துப் போன சாக்ஷி.. வைரலாகும் போட்டோ!

சென்னை: நடிகை சாக்‌ஷி அகர்வாலை அழகான ஓவியமாக வரைந்து அவரது ரசிகர் அன்பு பரிசளித்துள்ளார்.

தமிழ் பிக்பாஸ் சீசன் மூன்று மூலமாக பிரபலமானவர் நடிகை சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் போட்டியில் பங்கேற்று பிரபலமடைந்த இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 A fan gifts a painting of actress Sakshi Agarwal

அட்லி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் ராஜா ராணி இதில் ஆர்யா மற்றும் சந்தானம் வில்லன் தீனாவிடம் பேசும் காட்சி அனைவருக்கும் நினைவில் இருக்கும் அந்த காட்சியில் சந்தானம் பேசும் வசனம் வரும் போது ஒரு பெண் அமர்ந்து இருப்பார் அது தான் சாக்‌ஷி அகர்வால். பார்க்கும் போது அடையாளம் தெரியாதவர் போல இருப்பார்.

இதன் பின் பல படங்களில் நடித்தார் சாக்‌ஷி, விஜய் சேதுபதி நடித்த காதலும் கடந்து போகும் படத்தில் கவிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்த காலா திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக வருவார். இதனை அடுத்து சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாராவுடன் கூட பணியாற்றும் ஒருவராக நடித்து இருப்பார்.

 A fan gifts a painting of actress Sakshi Agarwal

இந்த படத்திற்கு அடுத்து பிக்பாஸில் கலந்து கொண்டார். இதில் அவருக்கு தமிழ் ரசிகர்களிடையே ஒரு நல்ல மார்கெட்டை ஏற்படுத்தியது. இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவானது.

பிக்பாஸ்ஸை தொடர்ந்து இவருக்கு பல பட வாய்ப்புக்கள் குவிந்தது. ராய் லட்சுமி நடிக்கும் சிண்ட்ரெல்லா, ஜி. வி பிரகாஷ் நடிக்கும் ஆயிரம் ஜென்மங்கள், ஆர்யாவின் டெடி போன்ற படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் சாக்‌ஷி.

தற்போது சாக்‌ஷியின் ரசிகர் ஒருவர் ஓவியத்தை அழகாக வரைந்து அன்பு பரிசாக அளித்துள்ளார். இப்புகைப்படங்கள் ஆன்லைனில் வைரல் ஆகி வருகிறது. இதனை பார்த்த பலரும் பிரம்மன் வரைந்த ஓவியம் ஒன்றை உங்கள் வடிவில் கண்டோம் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Recommended Video

சாக்ஷி அகர்வால் கோவாவில் ஆடிய அழகு நடனம் - வீடியோ

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X