இந்த அவமானம் உனக்குத் தேவையா?.. செல்ஃபி எடுத்ததும் நடிகையின் ஆடையை மூட சொன்ன ரசிகை!

மும்பை: நடிகை கங்கனா ஷர்மா தனது துணிச்சலான ஆடைத் தேர்வுகளால் எப்போதும் கவனத்தை ஈர்ப்பவர். கடந்த வியாழக்கிழமை (ஏப்ரல் 16) இரவு, மும்பையில் உள்ள ஓர் உணவகத்திற்கு வெளியே கிளம்பி வந்த அவர், ஆழமான வி-நெக்லைன் கொண்ட கறுப்பு நிற கட்-அவுட் மினி லெதர் தாராள உடையை அணிந்திருந்தார்.

அவர் பாப்பராசிகளுக்கு போஸ் அளித்தபோது, ஒரு பெண் ரசிகை புகைப்படம் எடுக்க அணுகினார். கங்கனா ஒப்புக்கொண்டு போஸ் கொடுத்ததும், அந்த ரசிகை அவரை 'நங்கி' (நிர்வாணமாக) என்று சுட்டிக்காட்டி ஆடையை மூட சொன்னது அதிர்ச்சியளித்தது. இந்த விமர்சனத்திற்குப் பிறகும், கங்கனா எந்த எதிர்வினையும் இன்றி அமைதியாக உணவகத்திற்குள் சென்றார். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

A Fan girl slutshamed Kangana Sharma for her revealing dress after taking selfie

கங்கனா ஷர்மா, 2016 ஆம் ஆண்டு 'கிரேட் கிராண்ட் மஸ்தி' என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பல இசை வீடியோக்கள், டிவி மற்றும் OTT நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார். 'உல்லு ஆப்'பில் வெளியான 'மோனா ஹோம் டெலிவரி' நிகழ்ச்சி மூலம் பரவலாக அறியப்பட்ட இவர், 'கபில் ஷர்மா ஷோ'விலும் சில எபிசோடுகளில் பங்கேற்றார். அவருக்கு இன்ஸ்டாகிராமில் 3.3 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

யோகேஷ் என்பவரை மணந்து ஒரு மகனைப் பெற்றெடுத்த கங்கனா, திருமணத்திற்குப் பிறகு சில காலம் பொது வெளியில் தென்படவில்லை. 2024 ஆம் ஆண்டு நேர்காணல் ஒன்றில், கணவரை விவாகரத்து செய்ய வழக்கு நடந்து வருவதாக அவர் தெரிவித்தார்.

DNA நேர்காணலில் அவர், "2019 இல் நான் யோகேஷைச் சந்தித்து திருமணம் செய்தேன். ஆனால், பலமுறை சந்தித்த பிறகும், சேர்ந்து வாழ விரும்பவில்லை. அதற்கு இரு காரணங்கள் இருந்தன. என் வீட்டில் நான் மட்டுமே சம்பாதிப்பவர், என் சகோதரர் இளையவர்" என்றார்.

`

"என் தாய் மற்றும் என் சகோதரியின் திருமண வாழ்க்கை நன்றாக அமையாததும் இரண்டாவது முக்கிய காரணம்" என்றும் கங்கனா ஷர்மா மேலும் விளக்கமளித்தார். உர்ஃபி ஜாவேத்தை தொடர்ந்து பாலிவுட்டில் ஆபாச உடைகளை அணிந்துக் கொண்டு ஓவர் எக்ஸ்போஸாக போஸ் கொடுத்து அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார் கங்கனா ஷர்மா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X