ஆபாசமாக பேசிய ரசிகர்.. கூலாக பதிலடி கொடுத்த நடிகரின் மனைவி.. ட்ரெண்டாகும் போஸ்ட்
சென்னை: ரெடின் கிங்ஸ்லி தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நடிகராக இருந்துவருகிறார். அடிப்படையில் நடன கலைஞரான அவர் இப்போது ஏகப்பட்ட படங்களில் நடித்துவருகிறார். சூழல் இப்படி இருக்க கடந்த வருடம் சீரியல் நடிகை சங்கீதாவை திருமணம் செய்துகொண்டார் அவர். சங்கீதாவுக்கு இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் திருமண வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. சூழல் இப்படி இருக்க தன்னிடம் ஆபாசமாக பேசியவருக்கு சங்கீதா தரமான பதிலடி கொடுத்திருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லி இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் நெருங்கிய நண்பர் ஆவார். நெல்சன் முதன்முதலில் இயக்குவதாக இருந்த வேட்டை மன்னன் படத்தில் நடிப்பதற்கு ரெடினுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்தப் படம் ட்ராப்பானதால் மீண்டும் தனது நடன பள்ளி, ஈவெண்ட் மேனேஜ்மெண்ட் தொழில்களை கவனிக்க சென்றுவிட்டார் கிங்ஸ்லி.

கோலமாவு கோகிலா: பிறகு பல வருடங்கள் கழித்து கோலமாவு கோகிலா படத்தை இயக்கினார் நெல்சன் திலீப்குமார். நயன்தாரா, யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்த அந்தப் படம் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியாகி சக்கைப்போடு போட்டது. அதில் ரெடின் கிங்ஸ்லி நடித்து தன்னுடைய திறமையை காண்பித்து தனித்த அடையாளத்தை பெற்றார். இதன் காரணமாக அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைத்தன.
பிஸியான ரெடின் கிங்ஸ்லி: கோலமாவு கோகிலா மூலம் கிடைத்த வெளிச்சத்தை அடுத்து பல படங்களில் நடித்த அவர் தனது வசன உச்சரிப்பு, பாடி லாங்குவேஜ் மூலம் மேலும் பலரையும் கவர்ந்தார். இதன் காரணமாக வரிசையாக படங்களில் நடித்த அவர் கடைசியாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்திலும் நடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி அடுத்ததாக டஜன் கணக்கில் படங்களை கையில் வைத்திருக்கிறார்.
திருமணம்: 46 வயதான ரெடின் கிங்ஸ்லி திருமணம் செய்துகொள்ளாமல் இருந்த சூழலில் சீரியல் நடிகை சங்கீதாவை காதலித்து வந்திருக்கிறார். கடந்த வருடம் மைசூரில் ஒரு படப்பிடிப்பில் வைத்து இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணம் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சிம்ப்பிளாக திருமணத்தை முடித்துக்கொண்ட அவர்கள் மாலத்தீவு, துபாய் நாடுகளுக்கு ஹனிமூன் சென்றனர்.
இரண்டாவது திருமணம்: ஹனிமூனை முடித்துவிட்டு அவர்கள் சென்னையில் பிரமாண்டமான முறையில் ரிசப்ஷனை வைத்தார்கள். அதில் திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதற்கிடையே சங்கீதா கிரிஷ் என்பவரை ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். அவருக்கு ஏற்கனவே மகள் ஒருவரும் இருக்கிறார். சூழல் இப்படி இருக்க சங்கீதாவிடம் ரசிகர் ஒருவர் ஆபாசமாக பேசினார். அதற்கு சங்கீதா கூலாக பதிலடி கொடுத்திருக்கிறார்.
சங்கீதாவின் பதிலடி: அதாவது சங்கீதா தனது சமூக வலைதள பக்கத்தில் தன்னுடைய புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார். அதற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், அப்படியே வெச்சு செய்யணும் என்று ஆபாச தொனியில் பேசியிருந்தார். அதற்கு கூலாக பதிலடி கொடுத்த சங்கீதா இந்த ஜென்மத்தில் கஷ்டம் அடுத்த ஜென்மத்தில் கண்டிப்பா ட்ரை பண்ணலாம் என்று குறிப்பிட்டார். சங்கீதாவின் இந்த பதில் போஸ்ட் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











