”அட யாருப்பா இது... செளந்தர்யாவ அப்படியே ஜெராக்ஸ் எடுத்த மாதிரி?”: இன்ஸ்டாவை கலக்கும் க்யூட் சித்ரா

சென்னை: கார்த்திக் நடித்த 'பொன்னுமணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் செளந்தர்யா.

குறுகிய காலத்தில் ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார்.

நடிப்பைத் தொடர்ந்து அரசியலிலும் களமிறங்கிய செளந்தர்யா, 2004ம் ஆண்டு ஹெலிஹாப்டர் விபத்தில் மரணமடைந்தார்.

பொன்னுமணியில் அறிமுகமான சிந்தாமணி

பொன்னுமணியில் அறிமுகமான சிந்தாமணி

1992ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கந்தர்வா' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார் செளந்தர்யா. தொடர்ந்து தெலுங்கிலும் அடுத்தடுத்து சில படங்களில் நடித்த செளந்தர்யா, அப்படியே தமிழ்த் திரையுலகிலும் என்ட்ரி கொடுத்தார். 1993ல் வெளியான 'பொன்னுமணி' படத்தில் கார்த்திக் ஜோடியாக சிந்தாமணி என்ற பாத்திரத்தில் நடித்த செளந்தர்யா, தமிழ் ரசிகர்களை கிறங்கடித்தார். குழிவிழுந்த கன்னமும், வசீகரமான சிரிப்பும், காந்த கண்ணழகையும் ரசிகர்கள் கொண்டாடினர்.

முன்னணி ஹீரோக்களுடன் டூயட்

முன்னணி ஹீரோக்களுடன் டூயட்

'பொன்னுமணி' படத்தின் மூலம் தமிழிலும் பிரபலமான செளந்தர்யாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தனர். முத்துக் காளை, சேனாதிபதி என பிஸியான செளந்தர்யாவுக்கு. அருணாசலம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேரும் வாய்ப்புக் கிடைத்தது. அடுத்ததாக கமலுடன் 'காதலா கதலா', மீண்டும் ரஜினியின் ப்ளாக் பஸ்டர் படமான 'படையப்பா', விஜய்காந்துடன் 'தவசி', 'சொக்கதங்கம்' என டாப் கியரில் பயணித்தார்.

ஹெலிஹாப்டர் விபத்தில் மரணம்

ஹெலிஹாப்டர் விபத்தில் மரணம்

சினிமாவில் பிரபலமாக இருந்த போதே அரசியலிலும் அடியெடுத்து வைத்த செளந்தர்யா, பாஜகவிற்காக தேர்தல் பிரசாரங்களில் கலந்துகொண்டார். அப்படி 2004ம் ஆண்டில் பெங்களூருவில் இருந்து கரீம்நகருக்கு ஹெலிஹாப்டரில் புறப்பட்டார். ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த ஹெலிஹாப்டர் விபத்தில் சிக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார் செளந்தர்யா. நடிகை செளந்தர்யாவின் மரணம் திரையுலகை ரொம்பவே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

செளந்தர்யாவின் ஜெராக்ஸ்

செளந்தர்யாவின் ஜெராக்ஸ்

நடிகை செளந்தர்யா உயிரிழந்து 18 ஆண்டுகள் ஆனாலும் கூட அவரை ரசிகர்கள் யாரும் மறக்கவில்லை. இந்நிலையில், அச்சு அசலாக செளந்தர்யாவைப் போலவே உருவ ஒற்றுமை கொண்ட சித்ரா என்பவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறார். செளந்தர்யாவை அப்படியே உறித்து வைத்தது போல க்யூட்டாக இருக்கும் சித்ரா, அவரைப் போலவே க்யூட்டாக ரீல்ஸ் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். இன்ஸ்டா ஐடியிலும் செளந்தர்யா சித்ரா என குறிப்பிட்டுள்ளார். இதனால், அவரது வீடியோக்களும் ரீல்ஸ்களும் செம்மையாக ட்ரெண்ட் ஆகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X