For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  உள்ளே ஒரு குரல் சொல்லும்.. இந்த படம் பண்ணலாமா? வேணாமான்னு.. நடிகை நிதி அகர்வால் ஓப்பன் டாக்!

  |

  சென்னை: இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால், வரும் வெள்ளிக்கிழமை (மே 1) தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருப்பார் நிதி அகர்வால்.

  'Just another day all things green' - Nidhhi Agerwal shared fitness video on Instagram

  இயக்குநர் லக்‌ஷ்மண் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள 'பூமி' திரைப்படம் உழைப்பாளர்கள் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருந்தது.

  சிறப்பு.. ஜோதிகாவுக்கு சூர்யா சப்போர்ட்.. சொன்ன விஷயம் அருமையென அட்டென்டன்ஸ் போட்ட விஜய்சேதுபதி!சிறப்பு.. ஜோதிகாவுக்கு சூர்யா சப்போர்ட்.. சொன்ன விஷயம் அருமையென அட்டென்டன்ஸ் போட்ட விஜய்சேதுபதி!

  நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள லாக் டவுன் காரணமாக பூமி படத்தின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளிப் போயுள்ளது.

  பாலிவுட்டில் அறிமுகம்

  பாலிவுட்டில் அறிமுகம்

  24வயதான இளம் நடிகை நிதி அகர்வால் பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என ரவுண்டு கட்டி நடித்து வருகிறார். சபீர் கான் இயக்கத்தில் டைகர் ஷெராஃப் நடிப்பில் கடந்த 2017ம் ஆண்டு வெளியான முன்னா மைக்கேல் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் நிதி அகர்வால்.

  தெலுங்கு திரையுலகில்

  தெலுங்கு திரையுலகில்

  பாலிவுட்டில் முதல் படமே பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த நிலையில், டோலிவுட்டில் நடிகை நிதி அகர்வாலுக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன. நாக சைதன்யா, மாதவன் நடிப்பில் 2018ம் ஆண்டு தெலுங்கில் வெளியான சாவ்யாசாச்சி படத்தின் மூலம் டோலிவுட்டில் அறிமுகமான நிதி, தொடர்ந்து மிஸ்டர் மஜ்னு, ஐ ஸ்மார்ட் ஷங்கர் என வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

  தமிழில்

  தமிழில்

  பாலிவுட்டில் அறிமுகமாகி டோலிவுட்டில் அசத்திய நிதி அகர்வால், தற்போது தமிழில் பூமி படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், அந்த படத்தில் தனக்கு எப்படி வாய்ப்பு கிடைத்தது, இந்த லாக்டவுனை எப்படி சமாளிக்கிறேன் உள்ளிட்டவை குறித்து ஆன்லைன் போர்ட்டல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.

  கண் சிமிட்டல்

  கண் சிமிட்டல்

  ஜெயம் ரவியுடன் இணைந்து இயக்குநர் லக்‌ஷ்மண் இயக்கிய ரோமியோ ஜூலியட் மற்றும் போகன் படங்களில் நடிகை ஹன்சிகா நடித்திருந்தார். பூமி படத்தில் வேறு ஒரு ஹீரோயினை களமிறக்க நினைத்த இயக்குநர் லக்‌ஷ்மண், நிதி அகர்வால் பேசும்போது படபடவென அடித்துக் கொள்ளும் அவரது கண் சிமிட்டல் அழகுக்கு மயங்கி, தனது கதாபாத்திரத்திற்கான கதாநாயகி இவர் தான் என புக் செய்தாராம்.

  குரல் சொல்லும்

  குரல் சொல்லும்

  தான் நடிக்கும் படங்கள் எல்லாம் எப்படி வெற்றி பெறுகிறது என்பது தனக்கு தெரியவில்லை என்றும், படத்தின் கதையை கேட்கும் போது, உள்ளே ஒரு குரல் சொல்லும், இந்த படத்தை பண்ணலாமா? வேண்டாமான்னு.. அந்த உள்ளுணர்வை வைத்துத் தான் இதுவரை எல்லா படங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறேன் என்றார்.

  கைவண்ணம்

  கைவண்ணம்

  ஆர்ட் மற்றும் கிராஃப்ட் செய்வதில் நடிகை நிதி அகர்வால் கை தேர்ந்தவர். பெங்களூரில் உள்ள தனது வீட்டு கண்ணாடியை இவரே டிசைன் செய்துள்ளார். மும்பையில் உள்ள வீட்டில் ஸ்க்ரீன், கர்டெயின்கள் என அனைத்தும் நிதி அகர்வாலின் கைவண்ணத்தில் உருவானது தான். ஓவியம் வரைவதிலும் தனக்கு அதீத ஈடுபாடு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

  எப்போ வந்தாலும்

  எப்போ வந்தாலும்

  ஜெயம் ரவியின் நடிப்பில் ஒரு தனித்துவம் இருக்கிறது. மாஸ் கதை, ரொமான்டிக் கதை என எந்தவித கதையானாலும், தனது கதாபாத்திரத்தை அதற்கு ஏற்றது போல வடிவமைத்துக் கொள்கிறார். பூமி படத்தின் ரிலீஸ் தள்ளிப் போனது வருத்தத்தை அளித்தாலும், அந்த படம் எப்போ வந்தாலும், ஜெயிக்கும் என்பது மொத்த யூனிட்டுக்கே தெரியும் எனக் கூறி புன்னகைத்தார்.

  English summary
  If the world had not been locked down by coronavirus, this Friday would have marked Nidhhi Agerwal’s debut in Kollywood.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X