தாக்குதல் சம்பவம் எதிரொலி: புது வீடு தேடும் ஸ்ருதி ஹாஸன்
மும்பை: மும்பையில் தங்கியிருக்கும் ஸ்ருதி ஹாஸனின் வீட்டுக்குள் புகுந்து ஒருவர் தாக்கியதை அடுத்து அவர் புதிய வீடு தேடி வருகிறாராம்.
பாலிவுட் படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால் ஸ்ருதி ஹாஸன் மும்பை பந்த்ரா பகுதியில் வீடு எடுத்து தனியாக தங்கியுள்ளார். அவரது தங்கை அக்ஷரா தாய் சரிகாவுடன் தங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் 19ம் தேதி ஸ்ருதியின் வீட்டுக்குள் புகுந்த ஒருவர் அவரை தாக்கினார்.

தாக்க வரவில்லை
போலீசார் ஸ்ருதியை தாக்கிய அசோக்கை கைது செய்தனர். அவரோ தான் ஸ்ருதியை தாக்க செல்லவில்லை, மாறாக அவரிடம் தனது தம்பிக்கு ஸ்பாட் பாய் வேலை கேட்டு சென்றதாக விசாரணையில் கூறினார்.

வீட்டை மாத்துப்பா
ஸ்ருதி தாக்கப்பட்டதை அடுத்து அந்த வீட்டை உடனடியாக மாற்றுமாறு அவருக்கு அவரது நண்பர்கள் அறிவுரை வழங்கினர். அவர்கள் சொல்வது தான் சரி என்று ஸ்ருதிக்கும் தோன்றியது.

பாதுகாப்பு
ஸ்ருதி தற்போது வெல்கம் பேக் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு துபாயில் நடந்து கொண்டிருக்கிறது. முன்னதாக துபாய் கிளம்பும் வரை ஸ்ருதியின் வீட்டை 24 மணிநேரமும் பாதுகாக்க 2 பேரை நியமித்திருந்தார் படத்தின் தயாரிப்பாளர் பிரோஸ் நாதியத்வாலா.

புது வீடு
மும்பையில் நல்ல பாதுகாப்பான பகுதியில் வீடு பார்க்குமாறு ஸ்ருதி தனது ஏஜெண்ட்டிடம் கூறியுள்ளாராம். அவர் துபாயில் இருந்து வந்ததும் புதிய வீட்டில் குடியேறவிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











