கொடுத்ததெல்லாம் வேஸ்ட்டாக்கிட்டாங்களாம்.. விடாமுயற்சிக்கு டாட்டா சொல்கிறாரா திரிஷா?
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. அந்தப் படத்தில் நடித்துகொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் கமிட்டானார். அந்தப் படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த வருடம் மே ஒன்றாம் தேதி படத்தின் பெயர் வைக்கப்பட்டது. அதோடு சரி; படத்திலிருந்து வேறு எந்தவிதமான அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அஜர்பைஜான் ஷூட்டிங்: அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்தாலும் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள்வரை அஜர்பைஜானில் படத்தின் ஷூட்டிங் தொடங்கி நடந்துவந்தது. படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா உள்ளிட்டோர் நடித்தனர். மங்காத்தா படத்துக்கு பிறகு அஜித் - திரிஷா - அர்ஜுன் கூட்டணி இதில் இணைந்திருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். படத்தின் ஷூட்டிங்கின்போது மிலனின் உயிரிழப்பு உள்ளிட்ட சோக சம்பவங்கள் நடந்தாலும் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்தது.

முதல் ஷெட்யூல் ஓவர்: அஜித் அஜர்பைஜானிலிருந்து சென்னை வந்து மீண்டும் அங்கு சென்று நடித்துக்கொடுத்தார். ஏறத்தாழ படத்தின் முக்கியமான காட்சிகள் அனைத்தையும் அஜர்பைஜானிலேயே மகிழ் திருமேனி ஷூட் செய்து முடித்துவிட்டதாக கூறப்பட்டது. அதனையடுத்து அஜர்பைஜான் ஷெட்யூல் முடிந்துவிட்டதாகவும் அடுத்த லொக்கேஷன் தேடும் பணியில் படக்குழு ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு காரணம்; எக்கச்சக்க செலவை மகிழ் திருமேனி இழுத்துவிட்டதுதான் அஜர்பைஜான் ஷெட்யூல் முடிய காரணம் என்றும் கிசுகிசுக்கப்படுகிறது.
அடுத்தது எங்கே: தற்போது படக்குழு சென்னையில் இருக்கிறது. மார்ச் 15ஆம் தேதி படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் தொடங்கும் என்று புதிய தகவல் ஒன்று வெளியானது. ஆனால் ஷூட்டிங் குறித்த எந்த அப்டேட்டும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் விடாமுயற்சி படம் பற்றிய புதிய தகவல் ஒன்று கசிந்திருக்கிறது. அதாவது லைகா தற்போது கடுமையான நிதி நெருக்கடியில் இருப்பதன் காரணமாக அடுத்தக்கட்ட ஷூட்டிங்கை இன்னும் ஒரு மாதம் கழித்து வைத்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாகவும்; அதற்கு அஜித்தும் ஓகே சொல்லிவிட்டதாக கூறப்பட்டது.
அறுவை சிகிச்சை: சூழல் இப்படி இருக்க நடிகர் அஜித்குமாருக்கு கடந்த மாதம் அப்போலோ மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. காதிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பில் சிறிய வீக்கம் இருந்ததால் அந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு பூரண உடல்நலம் பெற்ற அவர் விடாமுயற்சி ஷூட்டிங்கிற்கு செல்வார் என்று பார்த்தால் பைக்கை எடுத்துக்கொண்டு டூருக்கு கிளம்பியிருக்கிறார். இதனால் விடாமுயற்சியின் நிலை என்னவென்று தெரியவில்லை.
புதிய தகவல்: இந்நிலையில் விடாமுயற்சி படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது இந்தப் படத்தில் திரிஷாதான் ஹீரோயினாக நடிக்கிறார். முதல் ஷெட்யூலில் அவரும் கலந்துகொண்டார். ஆனால் அடுத்தக்கட்டமாக ஷூட்டிங் எதுவும் நடக்கவில்லை. அதேசமயம் திரிஷாவின் கைகளில் விஸ்வம்பரா, தக் லைஃப் உள்ளிட்ட படங்கள் இருக்கின்றன. எனவே 2025ஆம் ஆண்டு ஜனவரி வரை அவரிடம் கால்ஷீட் கிடையாதாம். சூழல் இப்படி இருக்க இனி விடாமுயற்சியை தொடங்கினாலும் நடிக்க முடியாது என்பதால் அந்தப் படத்துக்கு குட் பை சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











