மாமனார், மாமியாருக்கு செம கிஃப்ட் கொடுத்த கீர்த்தி பாண்டியன்..செம மருமகள்.. ட்ரெண்டாகும் புகைப்படம்
சென்னை: நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். கடந்த 2019ஆம் ஆண்டிலிருந்து தமிழ் சினிமாவில் நடித்துவரும் அவர் கடைசியாக கண்ணகி படத்தில் நடித்திருந்தார். ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்தபோது அசோக் செல்வன் மீது காதல் ஏற்பட்டு அவரை திருமணமும் செய்துகொண்டார். இருவரும் ஒருவரையொருவர் நன்றாக புரிந்துகொண்டு வாழ்க்கையை காதலோடு நகர்த்திவருகின்றனர். இந்நிலையில் அசோக் செல்வனின் தாய் மற்றும் தந்தைக்கு கீர்த்தி பாண்டியன் பரிசு ஒன்றை கொடுத்தார். அதுதொடர்பான புகைப்படம் இப்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பெயர் எடுத்த நடிகராக திகழ்ந்தவர் அருண் பாண்டியன். ஆக்ஷன் ஹீரோவாக அறியப்பட்ட அவருக்கு கீர்த்தி பாண்டியன் என்ற மகள் இருக்கிறார். தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த கீர்த்தி பாண்டியன் தும்பா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அந்தப் படமானது கடந்த 2019ஆம் ஆண்டு வெளியானது. படத்துக்கு போதிய வரவேற்பு கிடைக்காவிட்டாலும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓரளவு நல்ல பெயரே கிடைத்தது.

அடுத்தடுத்த படங்கள்: தும்பா படத்துக்கு பிறகு அன்பிற்கினியாள் படத்தில் நடித்தார். அதில் அருண் பாண்டியனும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக கீர்த்தி பாண்டியன் நடிப்பில் கண்ணகி படம் வெளியானது. படத்துக்கு நல்ல ரெஸ்பான்ஸையே ரசிகர்கள் கொடுத்தனர்.குறிப்பாக கீர்த்தி பாண்டியனின் நடிப்புக்கும் ரசிகர்கள் தங்களடு பாராட்டை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ப்ளூ ஸ்டார் டூ திருமணம்: அடுத்ததாக அவரது நடிப்பில் ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகிறது. பா.இரஞ்சித் தயாரிப்பில் அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் நடித்தபோதுதான் அசோக் செல்வனுக்கும், கீர்த்தி பாண்டியனுக்கும் காதல் ஏற்பட்டது. இருவரின் காதலுக்கும் வீட்டாரின் சம்மதம் கிடைக்க அண்மையில்தான் திருமணம் நடந்தது. அந்தத் திருமணத்திலிருந்து கீர்த்தி மேற்கொண்டு அடையாளப்பட்டார்.
உருவ கேலி: முக்கியமாக கீர்த்தி பாண்டியன் அசோக் செல்வனை திருமணம் செய்துகொண்டதால் அவரது உருவத்தை வைத்து கேலி செய்தனர். ஆனால் அப்படி செய்தவர்களுக்கு அசோக் தரமான பதிலடியை கொடுத்தார். அதுமட்டுமின்றி எல்லோரையும் வம்பிழுக்கும் பயில்வான் ரங்கநாதனை ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் எங்கள் வீட்டில் சண்டை என்று நீங்கள் வந்து பார்த்தீர்களா என கேள்வி கேட்டு சம்பவம் செய்தார் கீர்த்தி.
ஓனர் கிடையாது: மேலும் சில மாதங்களுக்கு முன்புகூட அசோக் செல்வனிடம், திருமணத்துக்கு பிறகு கீர்த்தி பாண்டியன் நடிப்பாரா என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அசோக், நான் ஒன்றும் கீர்த்தி பாண்டியனுக்கு ஓனர் கிடையாது என்று சாட்டையடி பதில் கொடுத்தார்.கீர்த்தி மற்றும் அசோக்கின் செயல்களையும், பதில்களையும் நெட்டிசன்கள் இணையத்தில் கொண்டாடிவருகின்றனர்.மேலும் சிறந்த ஜோடியாக இவர்கள் வலம் வருவார்கள் என்றும் கூறுகின்றனர்.
கிஃப்ட் கொடுத்த கீர்த்தி பாண்டியன்: இந்நிலையில் அசோக் செல்வனின் தாய் மற்றும் தந்தைக்கு கீர்த்தி பாண்டியன் கார் ஒன்றை பரிசாக கொடுத்திருக்கிறார். அதாவது மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக அசோக் செல்வனின் தாய் மற்றும் தந்தையின் கார் சேதமடைந்தது. இதனையடுத்து அவர்களுக்கு புதிய கார் ஒன்றை சில மாதங்களுக்கு முன்பு வாங்கிக் கொடுத்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தை அதிகம் பகிரும் நெட்டிசன்கள் இந்தக் காலத்தில் இப்படி ஒரு மருமகளா என்று கமெண்ட்ஸ் செய்து திடீரென ட்ரெண்டாக்கிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











