ரௌடி பேபியாக மாறிய சரண்யா பொன்வண்ணன்.. ஓடி வந்து புகார் கொடுத்த பெண்!

சென்னை: கார் பார்க்கிங் தொடர்பான பிரச்சனையில் பக்கத்து வீட்டுக்கார பெண்ணை கொன்னுடுவேன் என சரண்யா பொன்வண்ணன் மிரட்டியதாக காவல் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. இந்த செய்தி இணையத்தில் டிரெண்டானதை அடுத்து இணையவாசிகள் பார்ப்பதற்கு சாந்தமாக இருக்கும் இவரா இப்படி ரௌடி பேபியாக மாறிவிட்டார் என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான சரண்யா பொன்வண்ணன், மணிரத்னம் இயக்கத்தில் உருவான நாயகன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படமே இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இந்த படத்தில், மும்பை ரெட் லைட்டில் இருக்கும் பெண் கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்திருந்தார். இந்த படத்தைத் தொடர்ந்து, மனசுக்குள் மத்தாப்பூ, என் ஜீவன் பாடுது, கருத்தம்மா, மீண்டும் சாவித்திரி என அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.

A police complaint against actress saranya ponvannan for car parking issues

நடிகை சரண்யா பொன்வண்ணன்: இதையடுத்து, நடிகர் பொன்வண்ணனை திருமணம் செய்து கொண்டு சினிமாவை விட்டு விலகி கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் சினிமா பக்கம் தலைகாட்டாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த இவர், ஜீவா நடித்த ராம் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்தார். அந்த படத்தைத் தொடர்ந்து தவமாய் தவம் இருந்து, எம் மகன், கிரீடம், புலி வருது என அடுத்தடுத்து படங்களில் அம்மாவாக நடித்தார்.

பக்காவான அம்மா: களவாணி படத்தில் ஆடி போய்... ஆவணி வந்தா இவன் டாப்புல வருவான் என்ற வசனமும், தனுஷ் நடித்த வேலை இல்லா பட்டதாரி படத்தில் அம்மானா இப்படித்தான் இருக்க வேண்டும் என்று, அனைத்து குழந்தைகளும் ஆசைப்படும் அளவிற்கு நிறைவான கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார். இந்த படத்தில் சிறப்பாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருது, விஜய் டிவி விருது என பல விருதுகளை குவித்தார். இந்த படத்திற்கு பிறகு அம்மா கதாபாத்திரமா கூப்பிடு சரண்யாவை என இயக்குநர்கள் சொல்லும் நடிகையாக இருக்கிறார். அதற்கு காரணம் இவரின் சாந்தமான முகம் தான்.

காவல் நிலையத்தில்: இந்நிலையில் நடிகை சரண்யா பொன்வண்ணன், தன்னை மிரட்டி பேசியதாக சிசிடிவி ஆதாரத்துடன் ஸ்ரீதேவி என்பவர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். அதில், காரை நிறுத்துவது தொடர்பாக சரண்யா தன்னிடம் சண்டை போட்டதாகவும், அப்போது அவர் என்னை கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். அந்தப் புகாரின் அடிப்படையில் சரண்யாவை விசாரிக்க காவல்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தியை கேள்விப்பட்ட நெட்டிசன்ஸ், சாந்தமான சரண்யாவா இப்படி ரௌடி பேபியாக மாறிவிட்டார் என்று கமெண்ட்டுகளை ஷேர் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X