»   »  பாம்பென்றால் படையே நடுங்கும் போது... ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..!

பாம்பென்றால் படையே நடுங்கும் போது... ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: சண்டி வீரன் படப்பிடிப்பின் போது நடிகை ஆனந்தி, பாம்புகள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நடந்த படப்பிடிப்பில் பயம் கலந்த பீதியுடன் நடித்தாராம்.

‘பொறியாளன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஆனந்தி. அதனைத் தொடர்ந்து, பிரபு சாலமனின் ‘கயல்' படம் மூலம் ஆனந்தி திறமையான நடிகைகள் பட்டியலில் இணைந்தார்.

இவர் தற்போது சண்டி வீரன், திரிஷா இல்லன்னா நயன்தாரா என இரண்டு தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார்.

2 படங்கள்....

2 படங்கள்....

‘சண்டி வீரன்' படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாகவும், 'திரிஷா இல்லன்னா நயன்தாரா' படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு ஜோடியாகவும் கயல் நடித்துக் கொண்டிருக்கிறார்.

சண்டி வீரன்...

சண்டி வீரன்...

இதில் சற்குணம் இயக்கி வரும் ‘சண்டி வீரன்' படப்பிடிப்பு சமீபத்தில் தஞ்சாவூரிலுள்ள ஏரி ஒன்றில் நடந்திருக்கிறது.

பக்கத்தில் பாம்பு...

பக்கத்தில் பாம்பு...

அப்போது மான்டேஜ் பாடலுக்கான இந்த படப்பிடிப்பின் போது ஆனந்திக்கு மிக அருகில் பாம்பு ஒன்று நின்று கொண்டிருந்ததாம். முதலில் இதை கவனிக்காத ஆனந்தி தைரியமாகத் தான் நடித்துக் கொண்டிருந்திருக்கிறார்.

பதறிப் போன ஆனந்தி...

பதறிப் போன ஆனந்தி...

எதேச்சையாக தனக்கு அருகில் பாம்பு இருப்பதைக் கண்டு பதறி விட்டாராம் ஆனந்தி. அந்த இடத்தைவிட்டு அலறி அடித்துக் கொண்டு ஓடியிருக்கிறார்.

ஏரியில இதெல்லாம் சகஜமப்பா...

ஏரியில இதெல்லாம் சகஜமப்பா...

பிறகு அந்த ஏரிக்கு அருகே பாம்பு நடமாட்டம் எல்லாம் சகஜம் என படப்பிடிப்புக் குழுவினர் தைரியம் கொடுத்து, மீதிக் காட்சிகளில் ஆனந்தியை நடிக்க வைத்துள்ளனர்.

பாம்பென்றால் படையே நடுங்கும் போது, ஆனந்தி மட்டும் அலறாமல் அல்வாவா சாப்பிடுவார்..!

English summary
Recently the shooting of Sandi Veeran took place in a lake in Thanjavur. When a montage song sequence was being shot, a snake was standing by Anandhi. She who did not notice this was acting boldly. At one point of time, when she noticed the snake, she screamed and ran away from the place.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil