திரிஷா கொஞ்சம் சிம்ரன் கொஞ்சம் இரண்டும் சேர்ந்த கலவை தான் பிரியா பவானி சங்கர்! இயக்குநர் புகழாரம்!
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் நடிகைகள் திரிஷா, சிம்ரன் ஆகியோர் கலந்த கலவை என இயக்குநர் எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் தனது முதல் இரண்டு படங்களை உச்ச நட்சத்திரங்களை வைத்து இயக்கியவர் தான் எஸ்.ஜே.சூர்யா. இருக்கு ஆனா இல்ல என்ற ஒற்றை வரி வசனத்தில் தமிழ் திரையுலகையே கலக்கியவர்.

தற்போது பல படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த சிம்ரன் மற்றும் திரிஷாவை போல தற்போது ஒரு ஹீரோயின் உள்ளார் என்று கூறியுள்ளார்.
தனது முதல் திரைப்படத்திலே அஜித்தை இயக்கி அந்த படத்தை வெற்றி பெற செய்த உடன், இவரை தமிழ் சினிமா அடையாளம் கண்டு கொண்டது, இரண்டாவது படமாக விஜய்யை வைத்து ஒரு காதல் திரைப்படம் எடுத்தார் அதுவும் ஹிட் ஆக முன்னணி இயக்குனர் ஆனார் எஸ்.ஜே.சூர்யா.
பின் இவரது படமான நீயூ பல சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக வெளியானது. இதன் பின் வரிசையாக படங்களை இயக்கினார். வேறு இயக்குனர் படங்களிலும் நடித்தார். பத்து வருடங்கள் கழித்து இசை என்ற படத்தை இயக்கி,தயாரித்து,நடித்து மற்றும் அப்படத்திற்கு இசையும் அமைத்து படத்தை வெளியிட்டார் இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.

இதன் பின் நடிப்பில் வேறு ஒரு பரிமாணத்தை தொட்ட அவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் மகேஷ் பாபுவிற்கு வில்லனாக நடித்தார். இவ்விரண்டு படங்களும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
தனது யதார்த்தமான நடிப்பால் கடந்த வருடம் பல சிறுவர்களை மான்ஸ்டர் என்ற படம் முலம் அனைவரையும் கவர்ந்தார் எஸ்.ஜே.சூர்யா. தற்போது அப்படத்தில் நடித்த பிரியா பவானி சங்கர் உடன் பொம்மை என்ற படத்தில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.இப்படத்தை இயக்குனர் ராதா மோகன் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா இது பிரியா பவானி சங்கர் அல்ல நடிகை சிம்ரன் கொஞ்சம் நடிகை திரிஷா கொஞ்சம் என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











