Kajal Agarwal - அந்த இடத்தில் கை வைத்த ரசிகர்.. உச்சக்கட்ட கோபத்தில் காஜல் அகர்வால்.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: நடிகை காஜல் அகர்வால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அஜித், விஜய், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்த அவர் இப்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவருகிறார். திருமணமாகி குழந்தை பெற்றுக்கொண்ட அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது அவருடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட ரசிகர்கள் தவறான முறையில் தொட்டதால் உச்சக்கட்ட கோபத்துக்கு ஆளானார் காஜல் அகர்வால்.

காஜல் அகர்வால் தமிழில் பழனி படம் மூலம் அறிமுகம் ஆனார். அதனையடுத்து பாரதிராஜா இயக்கத்தில் வெளியான பொம்மலாட்டம் படத்தில் நடித்தார். அவர் ஆரம்பத்தில் நடித்த படங்கள் சரியாக போகாவிட்டாலும் காஜல் அகர்வாலை தமிழ் சினிமா வரவேற்க தயாரானது. தொடர்ந்து தமிழில் மோதி விளையாடு உள்ளிட்ட படங்களில் நடித்த அவர் தெலுங்கிலும் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

A video of a fan inappropriately touching Kajal Agarwal has trended on social media

மஹதீரா: தெலுங்கில் அவர் கவனம் செலுத்த ஆரம்பித்ததும் ராஜமௌலி இயக்கத்தில் மஹதீரா படத்தில் நடித்தார். ராம்சரண் ஹீரோவாக நடித்தார். படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தெலுங்கில் மட்டுமின்றி தமிழிலும் அந்தப் படம் மாவீரன் என்ற பெயரில் வெளியாகி ஹிட்டாக காஜலை முழுமையாக உபயோகப்படுத்த ஆரம்பித்தது கோலிவுட்.கோலிவுட் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகமான டோலிவுட்டும் காஜலுக்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுத்தது.

முன்னணி ஹீரோக்கள்: தமிழில் சின்ன சின்ன ஹீரோக்களுடன் நடித்துவந்த அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் ஹீரோயினாக கமிட்டானார். அதில் அவரது நடிப்பும் அழகும் ரசிகர்களை கவர்ந்துவிட சூர்யா, அஜித்,கார்த்தி உள்ளிட்டோருடன் நடிக்க ஆரம்பித்தார். இவற்றில் அஜித்துடன் நடித்த விவேகம் படம் படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி க்ளைமேக்ஸ் காட்சியில் அவரது நடிப்பை வைத்து சிலர் ட்ரோலும் செய்தனர்.

திருமணம்: இந்தச் சூழலில் அவர் கடந்த 2020ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். கௌதம் கிச்சுலு என்பவரை திருமணம் செய்துகொண்ட காஜல் ஒரு ஆண் குழந்தையையும் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளார். அவருடன் நேரம் செலவழித்துவந்த காஜல் அக்ரவால் மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்து கடைசியாக தமிழில் கருங்காப்பியம் என்ற படத்தில் நடித்தார்.

இந்தியன் 2: அதுமட்டுமின்றி ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதேபோல் தனது 60ஆவது படம் குறித்த அறிவிப்பையும் சில மாதங்களுக்கு முன்புதான் காஜல் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவர் சினிமாவிலிருந்து விலகப்போவதாக வெளியான தகவலை மறுத்த காஜல் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன் என்றும் கூறியிருந்தார். விரைவில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகலாம்.

தவறான முறையில் தொட்ட ரசிகர்: இந்நிலையில் அவர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது ரசிகர் ஒருவர் அவருடன் செல்ஃபி எடுப்பதற்காக அருகில் வந்தார். அந்தச் சமயத்தில் காஜல் எதிர்பார்க்காதபோது அவரது இடையில் ரசிகர் கையை வைத்தார். இதனால் உச்சக்கட்ட கோபமடைந்த காஜல் அகர்வால்; அந்த ரசிகரை பார்த்து என்ன இதெல்லாம் என்று கையை அசைத்தபடி கேள்வி கேட்டார். பிறகு அந்த ரசிகரை அங்கிருந்த பாக்ஸர்கள் அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தினர். அதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X