சல்மான்கானுக்கு முத்தமிட்ட ராஷ்மிகா?.. செம அழகுதான் ஆனால் அது வராது.. பதிலடி தந்த நடிகை

சென்னை: இந்தியாவின் கிரஷ் நடிகை என பெயர் பெற்றவர் ராஷ்மிகா மந்தனா. அணிமல் படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் சென்றவர், சிக்கந்தர் படத்தில் சல்மான்கானுடன ஜோடி போட்டு கலக்கியிருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருந்தாலும் சோஷியல் மீடியாவிலும் ராஷ்மிக மந்தனா ஆக்டிவாக இருக்கிறார்.இந்நிலையில், ரசிகர் கேட்ட ஒரு கேள்வியால் அப்செட்டான அவர், அதற்கு உடனடி பதிலும் கொடுத்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் உண்மையில் சுட்டு போட்டாலும் அது வரவே வராது என திட்ட தொடங்கிவிட்டனர்.

கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனவர் ராஷ்மிகா மந்தனா. பிறகு தெலுங்கில் சலோ, கீதா கோவிந்தம் படம் அவருக்கு மிகப்பெரி பிரேக் கொடுத்தது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா ஜோடி ஹிட் ஜோடியாகவும் மாறியது. இதைத்தொடர்ந்து தெலுங்கில் அல்லு அர்ஜூனுடன் புஷ்பா, புஷ்பா 2 படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். விஜயுடன் வாரிசு படத்தில் விஜய்க்கு இணையாக டான்ஸ் ஆடி கலக்கினார். இதைத்தொடர்ந்து தமிழ் தெலுங்கை தாண்டி பாலிவுட்டில் அணிமல் படத்தின் மூலம் ரன்வீர் கபூருக்கு ஜோடியாக நடித்தார். அதில் அவரது நடிப்பு கலவையான விமர்சனங்களை பெற்றன. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சாவா வசூல் வேட்டை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

A video of actress Rashmika Mandanna kissing Salman Khan goes viral

சல்மான்கானுடன் ஜோடி: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள சிக்கந்தர் படத்தில் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர்,டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே, படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகாவுக்கும் உங்களுக்கும் 30 வயது வித்தியாசம். மகள் வயதில் உள்ள பெண்ணுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறீர்கள் என செய்தியாளர்கள் சல்மான்கானிடம் கேள்வி கேட்டனர். அதற்கு சற்றும் சலைக்காமல் உடனடி பதிலடி தந்த சல்மான்கான், அவருடன் மட்டும் அல்ல அவரது மகளுடன் சேர்ந்து நடிப்பேன். உங்களுக்கு இதில் ஏதேனும் பிரச்னை இருக்கிறதா. ராஷ்மிகா மந்தனாவுடன் நடிப்பதில் அவரது தந்தைக்கு ஏதும் பிரச்னை இல்லை என விளக்கம் அளித்தார் சல்மான்கான்.

சல்மான்கானுக்கு முத்தமா?: சிக்கந்தர் திரைப்படம் ரமலான் தினத்தில் ரிலீஸ் ஆக இருப்பதால் இப்படத்தை காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், பட புரோமோஷன் நிகழ்ச்சியில் ராஷ்மிகா. சல்மான்கானுக்கு முத்தம் கொடுப்பது போன்ற வீடியோ வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனால், இந்த வீடியோ ஏஐ கொண்டு எடிட் செய்யப்பட்டது என தகவல் வெளியாகியுள்ளது. இப்படி ஒரு நிகழ்வு நடக்கவில்லை இது பொய்யான செய்தி என்றும் நிரூபணம் ஆகியுள்ளது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு இதுபோன்ற பேக் வீடியோக்களை நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர் என கூறப்படுகிறது. முன்னதாக ராஷ்மிகா கவர்ச்சி ஆடையில் லிப்டிற்கு வருவது போன்ற ஏஐ சித்தரிக்கப்பட்ட வீடியோ வெளியாகி சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

A video of actress Rashmika Mandanna kissing Salman Khan goes viral

நடிக்கவே தெரியாது: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ராஷ்மிகா, அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இதனிடையே, ராஷ்மிகாவை பார்த்து நடிக்கவே தெரியாத அழகி என கமாண்ட் செய்திருக்கிறார். இதற்கு பதில் அளித்த ராஷ்மிகா நீங்கள் சொன்ன அந்த அழகை மட்டும் நான் எடுத்துக்கொள்கிறேன் என அந்த ரசிகருக்கு பதிலடி தந்திருக்கிறார். இந்நிலையில், மேலும், சிலர் சுட்டு போட்டாலும் உங்களுக்கு நடிப்பே வராது அழகை வைத்து ரொம்ப நாள் ஆட முடியாது என்றும் கடுமையான வார்த்தைகளால் விமர்சிக்கின்றனர்.

FAQs
ராஷ்மிகா தமிழில் நடித்த முதல் படம் எது?

சுல்தான்

Filmibeat Entertainment

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X