45 வயதில் ஜோதிகா செய்வதை பாருங்களேன்.. ரசிகர்கள் உச்சக்கட்ட ஆச்சரியம்.. ட்ரெண்டாகும் வீடியோ

மும்பை: நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா இடையில் சில காலம் சினிமாவிலிருந்து ரெஸ்ட் எடுத்திருந்தார். பிறகு 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் சினிமாவுக்கு வந்த அவர் இப்போது பாலிவுட்டிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் அவரது நடிப்பில் கடைசியாக ஷைத்தான் வெளியானது. இதனையடுத்து ஸ்ரீகாந்த் என்ற படம் ரிலீஸாகவிருக்கிறது. நிலைமை இப்படி இருக்க தன்னுடைய தோழியுடன் ஜோதிகா செய்திருக்கும் செயல் ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்த்யிருக்கிறது.

ஜோதிகா 90களில் சினிமாவில் நுழைந்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர். க்யூட் எக்ஸ்பிரெஷன், பப்ளி தோற்றம் என தமிழ் ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தவர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டாப் ஹீரோயினாக வலம் வந்தார். எந்தக் கதாபாத்திரத்தை ஏற்றாலும் அதுவாகவே மாறி தனது நடிப்பு, எக்ஸ்பிரெஷன், பாடி லாங்குவேஜ் என அனைத்திலும் கலக்கக்கூடியவர். விஜய், அஜித், கமல் ஹாசன், விக்ரம் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டவர்.

A video of Jyothika climbing Everest has trended on social media

சந்திரமுகி, மொழி: ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த அவர் காலம் செல்ல செல்ல நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அந்தவகையில் அவர் நடித்த மொழி, சந்திரமுகி ஆகிய இரண்டு படங்களுமே அவரது கரியரில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. மொழியில் காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியாக கலங்கடித்திருந்த அவர், சந்திரமுகியில் ரஜினியை தாண்டி ஸ்கோர் செய்து அதகளம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவுடன் திருமணம்: இதற்கிடையே பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் சூர்யாவுடன் நடித்தபோது இருவரும் காதலிக்க தொடங்கினர். ஆனால் இவர்களது காதலுக்கு சிவக்குமார் ஆரம்பத்தில் ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு பிறகு வீட்டு சம்மதத்துக்காக பல வருடங்கள் இரண்டு பேரும் காத்திருந்து திருமணம் செய்துகொண்டனர். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடியாக இப்போது வலம் வரும் அவர்களுக்கு தேவ் என்ற மகனும், தியா என்ற மகளும் இருக்கிறார்கள்.

பிஸி ஜோதிகா: திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அவர் 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார். தொடர்ந்து ராட்சசி, உடன்பிறப்பே என ஏகப்பட்ட படங்களில் நடித்த அவர் இப்போது பாலிவுட்டில் பிஸியாக ஆரம்பித்திருக்கிறார். கடைசியாக அவரது நடிப்பில் ஷைத்தான் படம் வெளியானது. அதனையடுத்து ஸ்ரீகாந்த் என்ற படம் வெளியாகவிருக்கிறது. மேலும் சில தமிழ் படங்களிலும் அவர் நடிக்கவிருக்கிறார்.

ட்ரெக்கிங்: நடிப்பு மட்டுமின்றி மலை பிரதேசங்களுக்கு பயணம் செல்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் ஜோ. சில காலத்துக்கு முன்பு இமயமலைக்கு சென்றிருந்த அவர்; அங்கு எடுக்கப்பட்ட வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதேபோல் ஜிம்மில் பயங்கரமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்வதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஜோதிகா. அதைப் பார்க்கும் ரசிகர்கள், ஜோ இவ்வளவு ஃபிட்டா இருக்காங்களே என்று கமெண்ட்ஸ் செய்து அதனை ட்ரெண்டாக்குவார்கள்.

எவரெஸ்ட் நோக்கி: இந்நிலையில் ஜோதிகா எவரெஸ்ட் சிகரத்துக்கு ட்ரெக்கிங் சென்றிருக்கிறார். தனது தோழியுடன் சென்றிருக்கும் அவர், எவரெஸ்ட்டை நோக்கி நடப்பது, மிகச்சிறிய அறையில் தங்கியிருந்தது, கிடைக்கும் உணவை சாப்பிடுவது, பனி மழையை ரசித்துக்கொண்டே அதில் நனைவது உள்ளிட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் 45 வயதில் எவரெஸ்ட் ஏறுகிறாரே என்று ஆச்சரியத்துடன் கமெண்ட்ஸ் செய்து அந்த வீடியோவை ட்ரெண்டாக்கிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X