பாரில் பரதநாட்டியம் ஆடிய நதியா.. 80ஸ் ரீயூனியன் பார்ட்டியில் நடிகைகள் போட்ட கும்மாளம்
சென்னை: 80களில் ஃபேமஸாக இருந்த நடிகர்கள், நடிகைகள் வருடத்திற்கு ஒருமுறை சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்தவகையில் இந்த வருடமும் 80ஸ் ரீ யூனியன் நடைபெற்றது. இதில் நதியா, பிரபு, குஷ்பூ, சுஹாசினி என பலர் கலந்துகொண்டார்கள். இந்நிலையில் அந்த சந்திப்பின்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் காட்டு தீயாக பரவிவருகிறது.
மலையாள திரையுலகத்தில் தனது கலை பயணத்தை ஆரம்பித்தவர் நதியா. முதல் படமே மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு அவருக்கு ஏகப்பட்ட வாய்புகள் கொட்டி கிடைக்க ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார். மலையாளத்தில் அவருக்கு கிடைத்த வரவேற்பு போன்றே மற்ற மொழிகளிலும் சிறப்பாக கிடைத்தது.
தமிழில் நதியா: மலையாளத்தில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நதியாகவுக்கு தமிழில் பூவே பூச்சூடவா படத்தின் மூலம் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்தது. ஃபாசில் இயக்கியிருந்த அந்தப் படம் இன்றுவரை கொண்டாடப்படுகிறது. தமிழிலும் முதல் படம் மெகா ஹிட் என்பதால் இங்கும் பிஸியானார் அவர். அப்படி அவர், மந்திர புன்னகை, உனக்காகவே வாழ்கிறேன், ராஜாதி ராஜா, ராஜகுமாரன் என வரிசையாக நடித்து தள்ளினார்.

நோ கிளாமர்: நதியாவிடம் உள்ள ஸ்பெஷலே கிளாமர் காண்பிக்காததுதான். தான் நடித்த ஒரு படத்தில்கூட கிளாமர் ரோலை அவர் ஏற்றதில்லை. கிளாமர் காண்பிக்காமலும் ஒரு நடிகை சினிமாவில் வெல்லலாம் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார். சூழல் இப்படி இருக்க அவர் திருமணமாகி செட்டிலாகிவிட்டார். பிறகு ரவி மோகன் நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிகளில் கேரக்டர் ரோலை ஏற்றுவரும் அவர்; கடைசியாக லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் நடித்திருந்தார்.
80ஸ் ரீ யூனியன்: சூழல் இப்படி இருக்க 80களில் பிரபலமாக இருந்த நடிகர்களும், நடிகைகளும் வருடந்தோறும் சந்திப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். இந்த சந்திப்பில் நதியாவும் தவறாமல் கலந்துகொள்வார். அந்தவகையில் இந்த வருடமும் அந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் பிரபு, குஷ்பூ, நதியா, ரம்யா கிருஷ்ணன், சுஹாசினி, சிரஞ்சீவி, பாக்யராஜ், ரேவதி, வெங்கடேஷ் என பலர் கலந்துகொண்டார்கள். இந்த சந்திப்பின்போது தங்கள் கடந்த கால பசுமையான நினைவுகளை ஒருவருக்கொருவர் நினைவுப்படுத்திக்கொண்டார்கள்.
பாரில் பரதநாட்டியம்: இச்சந்திப்பில் ஹைலைட்டாக அமைந்தது என்றால் நதியா மற்றும் குஷ்பூவின் பரதநாட்டியம்தான். இரண்டு பேரும் போட்டிப்போட்டுக்கொண்டு நடனம் ஆடினார்கள். அதுதொடர்பான வீடியோவும் வெளியானது. ஆனால் அந்த வீடியோ வந்த பிறகு பலரும் அவர்களது நடனத்தை கவனித்தார்களோ இல்லையோ; அவர்கள் ஆடிய இடத்தை கவனித்து ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் ஆடும் இடத்தில் அவர்களுக்கு பின்னணியில் ஏகப்பட்ட மது பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் அட பாரிலேயே பரதநாட்டியத்தை அரங்கேற்றியிருக்கிறார்களே என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











