Rajamouli - அந்த நடிகையின் வீடியோதான் என் மொபைலில் ஓடிக்கொண்டிருக்கும்.. ராஜமௌலி சொன்ன டாப் சீக்ரெட்

ஹைதராபாத்: Rajamouli (ராஜமௌலி) இயக்குநர் ராஜமௌலி சலார் படத்தின் ப்ரோமோஷனின்போது நடிகை குறித்து அவர் பேசியது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் ராஜமௌலியை பலர் ரசித்துக்கொண்டிருக்கும்போது அவர் இந்த நடிகைக்கு மிகப்பெரிய ரசிகரா என்றும் நெட்டிசன்கள் ஆச்சரியப்பட்டிருக்கின்றனர்.

இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவர் ராஜமௌலி. நான் ஈ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அவர் பாகுபலியை இயக்கியதன் மூலம் வெகு பிரபலமாகிவிட்டார். இதன் காரணமாக அவரது இயக்கத்தில் எப்படியாவது நடித்துவிட வேண்டும் என நடிகர்கள் ஆர்வத்தோடு இருக்கின்றனர். இவர் கடைசியாக ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

A video of Rajamouli talking about Shruti Haasan has trended on the internet

பாகுபலி: சரித்திர கால கதை வருவது இப்போது பெருகியிருக்கிறது. ஆனால் அதை எப்படி உருவாக்கி வியாபாரம் செய்ய வேண்டும் என்பதில் முதல் விதை போட்டவர் ராஜமௌலி. பொன்னியின் செல்வன் படத்தின் புரோமோஷன்போது பேசியிருந்த மணிரத்னம் பாகுபலி வரவில்லை என்றால் பொன்னியின் செல்வனை என்னால் எடுத்திருக்க முடியுமா என தெரியாது என ராஜமௌலியை புகழ்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

வசூலை அள்ளிய பாகுபலி: பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரமாண்ட வெற்றி பெற்றது 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. அதேபோல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் 500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. ஒவ்வொரு காட்சியையும் படு பிரமாண்டமாக படமாக்கியிருந்தார் ராஜமௌலி. இதன் காரணமாக படத்தின் நாயகன் பிரபாஸ் இப்போது ஒரு பான் இந்தியா ஆர்ட்டிஸ்ட்டாக வலம் வந்துகொண்டிருக்கிறார். அதுமட்டுமின்ரி தென்னிந்தியாவின் படங்கள் பாலிவுட்டிலும் வசூலை அள்ளலாம் என நிரூபித்த படமும் பாகுபலிதான்.

ஆர்.ஆர்.ஆர்: அதேபோல் கடைசியாக இவர் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரணை வைத்து ஆர்.ஆர்.ஆர் படத்தை இயக்கினார். இந்தப் படம் மொத்தம் 1000 கோடி ரூபாயை வசூலித்தது. அதுமட்டுமின்றி ஆஸ்கர் ரேஸில் கலந்துகொண்டு, நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருதையும், கோல்டன் குளோப் விருதையும் வென்றது. இதனால் ராஜமௌலி உலக புகழ் பெற்ற இயக்குநராக மாறியிருக்கிறார்.

மகேஷ்பாபுவுடன்: ராஜமௌலி அடுத்ததாக மகேஷ் பாபுவை வைத்து படம் இயக்குகிறார். இந்தப் படமும் அவரது ஸ்டைலில் படு பிரமாண்டமாக தயாராக இருக்கிறது. அதற்கான ஆரம்பக்கட்ட பணிகளில் இப்போது ராஜமௌலி இருக்கிறார். படமானது ஆப்பிரிக்க காடுகளில் நடக்கும் அட்வென்ச்சரை மையமாக வைத்து உருவாகும் என முதலில் கூறப்பட்டது.

ராமாயணம்: ஆனால் சில மாதங்களுக்கு முன்பு வெளியான தகவலின்படி இந்தப் படமானது ராமாயணத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்படவிருப்பதாகவும்; மகேஷ் பாபுவின் கேரக்டர் அனுமனை தழுவி மேக் செய்யப்படுமென்று கூறப்படுகிறது. மேலும் படத்தில் தீபிகா படுகோனேவை ஹீரோயினாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்துவருகிறதாம்.

ராஜமௌலி பேட்டி: இந்நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியிருக்கும் சலார் படம் இன்று ரிலீஸாகியிருக்கிறது. ரசிகர்கள் படத்துக்கு பெரும் ஆதரவை கொடுத்துவருகின்றனர். இந்த சூழலில் அந்தப் படத்தின் ரிலீஸுக்கு முன்னர் நடந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் ராஜமௌலி பேசியிருப்பது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

அந்த ப்ரோமோஷனில் பிரசாந்த் நீல் உள்ளிட்டோருடன் ராஜமௌலி உரையாடினார். அப்போது பேசிய அவர், “சலார் படத்தின் மீது எனக்கு ஒரே ஒரு புகார் இருக்கிறது. அது என்னவென்றால் ஸ்ருதிஹாசனின் நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும். சாரு ஷீலா, ரேஸ் குர்ரம் படங்களில் அவர் ஆடிய நடனத்தைத்தான் எனது ஃபோனில் மீண்டும் மீண்டும் போட்டு பார்ப்பேன். ஆனால் நீங்களோ சலார் படத்தில் எந்த ஒரு டூயட் பாடலையும் வைக்கவில்லை என்று சொன்னீர்கள். எது எனக்கு ரொம்பவே ஏமாற்றமாக இருக்கிறது” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X