காருக்குள் இரவில் நடிகருடன் இருக்கும் பூஜா ஹெக்டே.. காதலர் இவர்தானோ?.. ட்ரெண்டாகும் வீடியோ

சென்னை: பூஜா ஹெக்டே ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தொடர்ந்து நடித்துவருபவர். கடைசியாக தமிழில் இவர் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் படுதோல்வியை சந்தித்தது. இருந்தாலும் பூஜா ஹெக்டேவின் அழகும், நடிப்பும் தமிழ் ரசிகர்களை கவர்ந்தது. தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் அவர் பாலிவுட் நடிகருடன் காரில் இருக்கும் வீடியோ ட்ரெண்டாகியுள்ளது.

மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முகமூடி. ஜீவா ஹீரோவாக நடித்திருந்த அந்தப் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. அந்த சமயத்தில் மிஷ்கின் உச்சக்கட்ட ஃபார்மில் இருந்ததன் காரணமாக பெரும் எதிர்பார்ப்போடு படம் வெளியானது. ஆனால் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் பூஜா ஹெக்டேவும் தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து நடிக்காமல் போனார். தமிழில் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் வாய்ப்புகள் கிடைத்தன.

A video of Rohan Mehra and Pooja Hegde together in a car has gone Trending

அடுத்தடுத்த படங்கள்: முகமூடி படத்துக்கு பிறகு ஒக்கா லைலா கொசம் என்ற தெலுகங்கு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சுமாரான வரவேற்பை பெற்றது. தமிழுக்கு அடுத்து தெலுங்கிலும் அவர் நடித்த படம் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெறாததால் பூஜாவின் கரியர் க்ளோஸ் என்று சிலர் ஆரூடம் கூறினார்கள். ஆனால் எதிர்பார்க்காத விதமாக தெலுங்கில் பூஜா ஹெக்டேவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. அந்தப் படங்களும் வரிசையாக அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தன.

ஹிந்தியில் என்ட்ரி: இதற்கிடையே தனது கரியரின் மூன்றாவது படத்திலேயே பாலிவுட்டுக்கும் சென்றார் பூஜா. பிறகு ஹவுஸ்ஃபுல் 4, ராதேஷ்யாம் (தெலுங்கு, ஹிந்தி) சர்க்கஸ், கிசி கா பாய் கிசி கி ஜான் உள்ளிட்ட படங்களில் நடித்தார். இருந்தாலும் தெலுங்கில்தான் அவருக்கு நல்ல மார்க்கெட் இருக்கிறது. கடைசியாக தெலுங்கில் அவர் ஆச்சார்யா படத்தில் நடித்திருந்தார். முக்கியமாக தெலுங்கில் புட்ட பொம்மா பாடல் அவரை பட்டித்தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது குறிப்பிடத்தக்கது.

பீஸ்ட் ரீ என்ட்ரி: தமிழில் அவர் அறிமுகமானாலும் முகமூடி தோல்விக்கு பிறகு இங்கு தலை காட்டாமல் இருந்தார். சூழல் இப்படி இருக்க இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பீஸ்ட் படத்தின் மூலம் அவரை மீண்டும் தமிழுக்கு அழைத்து வந்தார். விஜய் ஹீரோவாக நடிக்கும் படம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படத்தின் மூலம் தனக்கு தமிழில் மறு வாழ்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார் பூஜா ஹெக்டே. ஆனால் அவர் எதிர்பார்த்ததற்கு மாறாக படம் படுதோல்வியை சந்தித்தது. இதனால் மீண்டும் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் கிடைக்காமல் முடங்கியிருக்கின்றன.

தொடர் தோல்விகள்: தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என அவர் நடித்த ஏழு படங்கள் வரிசையாக தோல்வியையே சந்தித்திருக்கின்றன. இதனால் எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அவர் இப்போது ஹிந்தியில் தேவா என்ற படத்தில் நடித்துவருகிறார். கண்டிப்பாக இந்தப் படம் தனக்கு வெற்றியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்த்திருக்கிறார் பூஜா ஹெக்டே.

காருக்குள் பூஜா ஹெக்டே: இந்நிலையில் பூஜா ஹெக்டேவும், பாலிவுட் நடிகர் ரோஹன் மெஹ்ராவும் ஒரே காருக்குள் இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. அந்த வீடியோவில் காரின் பின் பக்க சீட்டில் இருவரும் ஒன்றாக அமர்ந்திருந்து கேஷுவலாக பேசிக்கொண்டிருக்கின்றனர். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் இதனைப் பார்த்த ரசிகர்கள், இவர்தான் பூஜா ஹெக்டேவின் காதலரா என்று கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X