ஒரே நிகழ்ச்சியில் முன்னாள் கணவர்.. காலில் விழப்போன சமந்தா.. என்ன நடந்தது தெரியுமா?
ஹைதராபாத்: சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த சமந்தா தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி சிட்டாடல் வெப் சீரிஸின் இந்திய வெர்ஷனான சிட்டாடல் ஹனி பனி சீரிஸில் நடித்திருக்கிறார். அதனை ராஜ் & டிகே இயக்கியிருக்கிறார்கள். இது தவிர்த்து வேறு சில படங்களில் நடிப்பதற்கும் அவர் பேச்சுவார்த்தை நடத்திவருவதாக கூறப்படுகிறது. இந்தச் சூழலில் நேற்று அமேசான் ப்ரைம் நடத்திய நிகழ்ச்சியில் சமந்தாவும், அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் கலந்துகொண்டனர்.
சமந்தா டாப் நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவர். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த நாக சைதன்யாவை காதலித்தார். நாக சைதன்யாவின் குடும்பம் பெரியது என்பதால் அவர்கள் சமந்தா - நாக சைதன்யாவின் காதலை திருமணம்வரை சென்று சேர்ப்பார்களா என்ற சந்தேகம் பலருக்கும் நிலவியது. ஆனால் நல்ல வேளையாக இரண்டு பேருக்கும் திருமணம் செய்துவைத்தார்கள். ஆனால் சில வருடங்கள் கழித்து இருவரும் திருமண வாழ்க்கையிலிருந்து வெளியே வந்தார்கள்.

சமந்தாவுக்கு வந்த பிரச்னை: திருமண முறிவுக்கு பிறகு ஒரு பாடலில் நடனம் ஆடிய சமந்தாவுக்கு மையோசிடிஸ் நோய் வந்தது. அதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்ட அவர் அதிலிருந்து மீண்டு வந்து சாகுந்தலம், குஷி ஆகிய இரண்டு படங்களில் நடித்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி படங்களின் ரிசல்ட் அமையவில்லை. முக்கியமாக சாகுந்தலம் படம் பலத்த அடி வாங்கியது. அவரது கரியரிலேயே மோசமான தோல்வி படம் என்ற பெயரையும் அப்படம்தான் பெற்றது.
குட்டி ரெஸ்ட்: சூழல் இப்படி இருக்க திடீரென சினிமாவிலிருந்து தற்காலிகமாக விலகுகிறேன் என்று சமந்தா அறிவித்தார். அறிவித்தது மட்டுமின்றி படங்களுக்காக தான் வாங்கியிருந்த அட்வான்ஸ் தொகையையும் அந்தந்த தயாரிப்பாளர்களிடம் முறைப்படி திருப்பி அளித்தார். சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்த அவர் வெளிநாடுகளுக்கு செல்வது போன்ற விஷயங்களை செய்தார். சமந்தாவுக்கு மீண்டும் நோயின் தாக்கம் அதிகரித்துவிட்டது அதற்கான சிகிச்சைக்காகத்தான் அவர் சினிமாவிலிருந்து குட்டி ரெஸ்ட் எடுத்திருக்கிறார் என்றனர் திரைத்துறையினர்.
ரீ எண்ட்ரி: சமந்தா இப்போது தன்னுடைய முடிவிலிருந்து வெளியே வந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். அதன்படி ராஜ் & டிகே இயக்கும் சிட்டாடல் ஹனி பனி வெப் சீரிஸில் நடித்திருக்கும் அவர் அடுத்ததாக ஹிந்தி படம் ஒன்றிலும், தமிழில் சில படங்களிலும் நடிப்பதற்கு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. அநேகமாக அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் மேடை: இந்நிலையில் சமந்தாவும், அவரது முன்னாள் கணவர் நாக சைதன்யாவும் ஒரே நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். அதாவது 2024ஆம் ஆண்டு அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கும் வெப் சீரிஸ்கள், ஷோக்கள் உள்ளிட்டவைகளை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில்தான் இரண்டு பேரும் கலந்துகொண்டார்கள். ஒரே நிகழ்ச்சியில் இருவரும் கலந்துகொண்டாலும்; ஒரே நேரத்தில் மேடையில் சமந்தாவும், நாக சைதன்யாவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சூழல் இப்படி இருக்க இயக்குநர் கரண் ஜோஹர் காலில் வருண் தவான் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார். உடனடியாக சமந்தாவும் கரண் ஜோஹர் காலில் விழ போனார். உடனே கரண் ஜோஹர், நோ நோ என்று சொல்லி அதை தடுத்துவிட்டார். இவை அனைத்தையும் நாக சைதன்யா சைலெண்ட்டாக பார்த்துக்கொண்டிருந்தார். சமந்தா தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











