இதுதான் ஸ்வர்ணமால்யானு முடிவு செய்யக்கூடாது.. மாத்திட்டே இருப்பேன்.. அடிபொலி செமயா பேசிருக்காங்க

சென்னை: சின்னத்திரை சேனலில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர் ஸ்வர்ணமால்யா. அதனையடுத்து மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தில் அவர் வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்தார். தனக்கு கொடுக்கப்பட்டிருந்த கேரக்டரை மிக நேர்த்தியாக நடித்திருந்த அவர் பிற மொழிகளிலும் நடித்திருக்கிறார் அவர். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் திடீரென சினிமாவிலிருந்து ஒதுங்கினார் அவர்.

சினிமாவில் வென்றுவிட வேண்டும் என்று பலரும் ஆசைப்பட்டு அந்த துறைக்கு வருவார்கள். சிலரோ சின்னத்திரையோடு தங்களது கரியர் போதும் என்ற முடிவிலும் இருப்பார்கள். ஆனால் சிலருக்கு மட்டும்தான் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் வாய்ப்பு கிடைக்கும். அப்படிப்பட்ட சிலரில் ஸ்வர்ணமால்யாவும் ஒருவர். தனது பயணத்தை சேனலில் தொகுப்பாளினியாக ஆரம்பித்த அவருக்கு மணிரத்னம் சினிமா வாய்ப்பை வழங்கினார்.

அலைபாயுதே ஸ்வர்ணமால்யா: அந்தவகையில் மணி இயக்கிய அலைபாயுதே திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்தார் ஸ்வர்ணமால்யா. படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தில் அவரது கேரக்டரும் சிறப்பாகவே வடிவமைக்கப்பட்டிருந்தது. முதல் படமே மணிரத்னத்தின் இயக்கம் என்பதால் அப்படத்தில் தனது நடிப்பு திறமையை அபாரமாக வெளிப்படுத்தி அப்ளாஸை அள்ளினார் அவர். இதனால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளும் கிடைத்தன.

A video of Swarnamalya talking about her beauty products has gone Trending
Photo Credit:

அடுத்தடுத்த வாய்ப்புகள்: அந்தவகையில் எங்கள் அண்ணா, யுகா,மொழி, பெரியார், அழகு நிலையம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த சூழலில் திடீரென அவர் சினிமாவிலிருந்து ஒதுங்கிவிட்டார். அதற்கு காரணம் அவரை சுற்றி எழுந்த சர்ச்சைகள் என்ற கருத்து இன்றளவும் இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் செல்வாக்கு மிகுந்த சாமியார் ஒருவருடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டிருந்தார் அவர்.

பிஸியான ஸ்வர்ணமால்யா: அந்த கிசுகிசுவோடு ஸ்வர்ணமால்யாவும் ஆள் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் போனது. அதேசமயம் அவர் திருமணம் செய்துகொண்டு வெளிநாட்டில் செட்டிலும் ஆகியிருந்தார். ஆனால் அந்தத் திருமணம் நடந்தபோது தனக்கு ரொம்பவே சின்ன வயது என்றும்; பெற்றோர்களால்தான் திருமணம் செய்துகொண்டேன் என்றும் ஓபனாக ஒரு பேட்டியில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சினிமாவில் நடிக்காமல் இருந்தாலும் யூடியூபில் தனது சேனலில் சில வீடியோக்களை பதிவேற்றுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

மீண்டும் நடிக்க வர வேண்டும்: சூழல் இப்படி இருக்க ஸ்வர்ணமால்யா மீண்டும் நடிக்க வர வேண்டும். சிறந்த குணசித்திர நடிகையாக அவர் தன்னை நிரூபிக்கலாம் என்று ரசிகர்கள் கோரிக்கைகளை வைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இருப்பினும் சினிமாவில் மீண்டும் நடிப்பது குறித்து இதுவரை எந்த முடிவையும் எடுக்காமல் இருந்துவருகிறார் அவர். இந்நிலையில் அவர் தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.

என்ன வீடியோ: அதாவது தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு தனது அழகு ஆபரணங்கள் குறித்து பேசிய அவர், "ஜிமிக்கி, தோடு போன்றவைகளை எனது நண்பர்கள் எனக்கு பரிசளிப்பார்கள். அதன் விலை என்னவென்று கேட்டால் விலை மதிப்பில்லாதது என்றுதான் சொல்வேன். அவர்கள் கொடுக்கும் வெள்ளி ஜிமிக்கி போன்றவைகளை புடவை உடுத்தும்போது மட்டுமின்றி ஜீன்ஸ் உடுத்தும்போதும் போட்டுக்கொள்வேன். ஸ்வர்ணமால்யா இப்படித்தான் என்று யாரும் ஒரு பாக்ஸுக்குள் என்னை அடைக்கக்கூடாது. நான் மாற்றிக்கொண்டே இருப்பேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X