Trisha - மேக்கப் இல்லாத திரிஷாவை பார்த்திருக்கிறீர்களா.. ட்ரெண்டாகும் வீடியோ.. ரசிகர்கள் ஆச்சரியம்
சென்னை: நடிகை திரிஷா கோலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம்வந்துகொண்டிருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக லியோ திரைப்படம் வெளியானது. படத்தில் விஜய்க்கு லிப் லாக் எல்லாம் செய்திருந்தார் திரிஷா. தொடர்ந்து இப்போது அவர் அஜித்துடன் விடாமுயற்சி, சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். மேலும் விஜய் நடித்துவரும் GOAT படத்தில் திரிஷா கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாகவும் சில நாட்களாக தகவல்கள் கசிந்துவருகின்றன.
ஒரு நடிகை சினிமாவில் 10 வருடங்கள் தொடர்ந்து டாப் 5 இடங்களுக்குள் இருப்பது பெரிய விஷயம். ஆனால் திரிஷாவோ ஏறத்தாழ 20 வருடங்களுக்கும் மேலாக டாப் பொசிஷனிலேயே இருக்கிறார். லேசா லேசா படத்தில் நடிக்க முதலில் கமிட்டாகி பின்னர் மெளனம் பேசியதே படத்தின் மூலம் அறிமுகமானார் அவர். முதல் படத்திலேயே அவரது நடிப்பு, அழகும் ரசிகர்களையும் கோலிவுட் இயக்குநர்களையும் அவர் பக்கம் திருப்பியது. அதன் காரணமாக வரிசையாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன.

தொடர்ந்து டாப் ஹீரோயின்: அதன்படி ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி என கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் தமிழில் ஜோடி போட்டுவிட்டார் திரிஷா. முக்கியமாக விஜய்யுடன் அவர் நடித்த கில்லி, விக்ரமுடன் அவர் நடித்த சாம் உள்ளிட்ட திரைப்படங்கள் சக்கைப்போடு போட்டன. இதனால் குறுகிய காலத்திலேயே நம்பர் ஒன் இடத்தை பிடித்தார் அவர். தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டார்.
சின்ன சறுக்கல்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்தவருக்கு இடையில் சின்ன சறுக்கல் ஏற்பட்டது. இருந்தாலும் சில படங்களில் நடித்துக்கொண்டுதான் இருந்தார். அப்படிப்பட்ட சூழலில்தான் 96 திரைப்படம் வெளியானது. படம் சூப்பர் ஹிட்டாக திரிஷா ஜானுவாக கொண்டாடப்பட்டார். அந்தப் படத்தின் ஹிட்டுக்கு பிறகு மீண்டும் லைம் லைட்டுக்கு வந்த திரிஷா பொன்னியின் செல்வன் 2 பாகங்கள், லியோ, ராங்கி என வரிசையாக படங்களில் நடித்து மீண்டும் பிஸியாகிவிட்டார்.
அடுத்தடுத்த படங்கள்: தற்போது அவர் கைவசம் விடாமுயற்சி, தக் லைஃப், விஸ்வம்பரா, கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் என வரிசையாக படங்கள் இருக்கின்றன. மேலும் ஹிந்தியிலும் ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் என்றும்; அதில் சல்மான் கான் ஹீரோ என்றும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி GOAT படத்தில் கேமியோ ரோலை திரிஷா ஏற்றிருக்கிறார் என்றும் கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மேக்கப் இல்லாத திரிஷா: 40 வயதாகும் திரிஷாவை பார்க்கும் ரசிகர்கள் வயது ஏற ஏற வைனுக்கு எப்படி சுவை கூடுமோ அதுபோல் திரிஷாவும் அழகாகிக்கொண்டே போகிறாரே என்று சிலாகித்துவருகின்றனர். இந்நிலையில் மேக்கப் இல்லாமல் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை போட்டிருக்கிறார். அந்த வீடியோவில் கண்மணி அன்போடு காதலன் பாடல் பின்னணியில் ஒலிக்க; திரிஷா காருக்குள் இருந்தபடி க்யூட்டான எக்ஸ்பிரெஷனை கொடுக்கிறார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள்; துளி மேக்கப் இல்லையென்றாலும் அழகாக இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்து ட்ரெண்டாக்கி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











