குழந்தை இருந்தாலும் பரவாயில்லை..மீனாவை திருமணம் செய்ய தயார்.. புயலை கிளப்பிய யூட்யூபர்
சென்னை: நடிகை மீனா 90களில் கோலிவுட், டோலிவுட்டை ஒரு கலக்கு கலக்கியவர். ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித், விஜயகாந்த், சத்யராஜ் என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தவர். கண்ணழகி மீனா என்றும் அவரை அழைப்பதுண்டு. அவர் வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஆனால் கணவர் உயிரிழந்துவிட்டார். இவருக்கு நைனிகா என்ற மகளும் இருக்கிறார். இந்தச் சூழலில் மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து கடந்த சில நாட்களாகவே தகவல்கள் வெளியாகின. தற்போது கேரளாவை சேர்ந்த யூட்யூபர் மீனாவை திருமணம் செய்துகொள்ள தயார் என்று சொல்லி புயலை கிளப்பியிருக்கிறார்.
குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமானவர் மீனா. குழந்தை நட்சத்திரமாக இருக்கும்போதே ஏறத்தாழ 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். இதன் காரணமாக மீனா எல்லோருக்கும் பரிச்சயமானவராக மாறிவிட்டார். அதன் பிறகு தமிழில் ராஜ் கிரண் நடித்த என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் மீனா. அந்தப் படம் மெகா ஹிட்டானது. குறிப்பாக மீனா சோலையம்மா என்ற கதாபாத்திரத்தில் கலக்கியிருந்தார்.

கனவுக்கன்னி மீனா: என் ராசாவின் மனசிலே படத்துக்கு பிறகு மீனாவுக்கு தமிழில் ஏகப்பட்ட வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் ரஜினி, கமல், சரத்குமார்,சத்யராஜ் உள்ளிட்ட பல ஹீரோக்களுடன் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் ரவுண்டு கட்டி நடித்தார் மீனா. இதன் காரணமாக பல வருடங்கள் தென் மாநிலங்களின் கனவுக்கன்னியாக ஜொலித்தார்.
ரஜினி கெமிஸ்ட்ரி: மீனா எத்தனை ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் ரஜினியுடன் அவருக்கு இருந்த கெமிஸ்ட்ரி மற்ற ஹீரோக்களிடம் குறைவாகவே இருந்ததாக பெரும்பாலான ரசிகர்கள் கூறினர். இருவரும் நடித்த எஜமான், வீரா, முத்து உள்ளிட்ட படங்கள் மெகா ஹிட்டாகின. ரஜினிக்கு மீனா ஜோடியாக நடிக்கும் முன்பே குழந்தை நட்சத்திரமாக அவருடன் அன்புள்ள ரஜினிகாந்த் படத்திலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திருமணம்: தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதிக்கு நைனிகா என்ற பெண் குழந்தை இருக்கிறார். அவர் விஜய்யுடன் தெறி படத்தில் நடித்தார்.மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த திருமண வாழ்க்கையில் வித்யாசாகர் மரணத்தை மீனா எதிர்பார்க்கவில்லை. இதன் காரணமாக மீனா சோகத்தின் உச்சத்துக்கே சென்றார். தொடர்ந்து அவருடன் நடித்தவர்கள் மீனாவை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.
குழந்தையும் நடிகை: மீனா போன்றே அவரது மகளான நைனிகாவும் சினிமாவில் நடித்திருக்கிறார். முதல் படமே விஜய்யுடன் தெறி படத்தி நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை அதற்கு பிறகு நைனிகா நடிக்கவில்லை. அதற்கு காரணம் அவரது படிப்புதான் என மீனா சில பேட்டிகளில் பகிர்ந்திருக்கிறார். முக்கியமாக சினிமாவைவிட அவளது கல்விதான் காப்பாற்றும் என ஆணித்தரமாக கூறுகிறார் மீனா.
இரண்டாவது திருமணம்: சூழல் இப்படி இருக்க மீனாவின் இரண்டாவது திருமணம் குறித்து கடந்த சில காலமாகவே பேச்சுக்கள் அதிகம் எழுந்தன. ஆனால் இரண்டாவது திருமணம் செய்துகொள்வதற்கு தனக்கு எந்த ஐடியாவும் இல்லை என்று தெளிவாக கூறிவிட்டார். இந்நிலையில் கேரளாவை சேர்ந்த சர்ச்சைக்குரிய யூட்யூபர் அப்துல் வர்கீஸ் என்பவர், "மீனாவுக்கு மகள் இருப்பது எனக்கு தெரியும். இருந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. மீனாவை நான் திருமணம் செய்துகொள்ள தயார்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.
தொடர் சர்ச்சை: அபுதுல் வர்கீஸை பொறுத்தவரை இதேபோன்று வேறு சில நடிகைகளையும் பேசியிருக்கிறார். ஏற்கனவே நித்யா மேனனையும், கமல் ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் ஆகியோரை தான் திருமணம் செய்துகொள்ள தயார் என்று பேசியிருந்ததும், மோகன் லால் நடித்த ஆராத் என்ற படத்தை மோசமாக விமர்சித்து சர்ச்சையை கிளப்பியதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











