ஆடையில்லாமல் பேப்பரை சுற்றிக் கொண்டு படுகவர்ச்சி போஸ் கொடுத்த அமலா பால்

By Siva

Recommended Video

ஆடையில்லாமல் பேப்பரை சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்த அமலா பால்- வீடியோ

சென்னை: ஆடை பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் டாய்லெட் பேப்பரை உடலில் சுற்றி படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அமலா பால். நீங்கள் நினைப்பது சரியே, நயன்தாரா வழியில் சென்று கொண்டிருக்கிறார்.

அவர் மேயாத மான் படம் புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக்

அமலா நடித்து வரும் ஆடை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டார். ஆங்கில தலைப்பு கொண்ட போஸ்டரை பாகுபலி புகழ் நடிகர் ராணா வெளியிட்டார். அந்த போஸ்டரை பார்த்த பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அமலா

ஆடை என்று பெயர் வைத்துவிட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அமலா பால் டாய்லெட் பேப்பரை உடலில் சுற்றியபடி அழுது கொண்டிருக்கிறார். துரு பிடித்த கம்பியை பிடித்துக் கொண்டு அழும் அமலா பால் முகம் மற்றும் கைகளில் ரத்தம் காயங்கள் உள்ளது. அமலா பால் இதுவரை இல்லாத அளவுக்கு கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்திருக்கிறார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

அமலா பால் இப்படி அதீத கவர்ச்சி காட்டி நடித்துள்ளது கோலிவுட்காரர்களையே வியக்க வைத்துள்ளது. நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகைகள் கூட இந்த அளவுக்கு கவர்ச்சி காட்டவில்லை. இப்படி கவர்ச்சி காட்டி நடிக்க அமலா பால் எப்படி ஒப்புக் கொண்டார் என்று பலரும் வியக்கிறார்கள்.

ஜோடி

ஜோடி

ஆடை படத்தில் அமலா பாலுக்கு ஜோடி எல்லாம் கிடையாதாம். இந்த படத்தில் நடிக்க கூடுதல் உடல் மற்றும் மன பலம் வேண்டும். அதை எல்லாம் புரிந்து நடிக்க சம்மதம் தெரிவித்தார் அமலா. இன்றைய தலைமுறையை இலவச போன் தகவல்கள் சீரழித்து வருவதை தோலுரிக்கும் படம் தான் ஆடை என்கிறார் இயக்குனர் ரத்னகுமார். தோலுரிப்பது சரி அமலாவுக்கு ஆடையை காணவில்லையே. சரி, அதற்கும் ஏதாவது விளக்கம் சொல்வார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X