ஆடை படத்தில் ஆடையில்லாமல் ஏன் நடித்தேன்?: அமலா பால் விளக்கம்
சென்னை: ஆடை படத்தில் இவ்வளவு ஆடை குறைப்பு செய்ததற்கான காரணத்தை தெரிவித்துள்ளார் அமலா பால்.
மேயாத மான் படம் புகழ் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் நடித்து வரும் படம் ஆடை. அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒரு போஸ்டரை வெளியிட்டு அனைவரையும் அதை பற்றியே பேச வைத்துவிட்டார் ரத்னகுமார்.

அமலா பால்
ஆடை பட போஸ்டரில் அமலா பால் இதுவரை இல்லாத அளவுக்கு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். ஆடையில்லாமல் டாய்லெட் பேப்பரை உடலில் சுற்றிக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் அமலா. அமலாவின் அதீத கவர்ச்சியால் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இது எல்லாம் நடக்கும் என்று தெரிந்து தான் துணிச்சலாக போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.

இயக்குனர்
ஆடை வழக்கமான கதை இல்லை. இது போன்ற படங்கள் தான் கலைஞர்களின் கலை தாகத்தை தூண்டிவிட்டு அவர்களுக்குள் இருக்கும் திறமையை வெளிக் கொண்டு வரும். என்னுடைய காமினி கதாபாத்திரம் எனக்கும், என்னை சுற்றி உள்ளவபர்களுக்கும் நடுக்கத்தை அளித்துள்ளது. மேயாத மான் படம் பார்த்த பிறகு ரத்ன குமார் மீதான நம்பிக்கை அதிகரித்துவிட்டது என்கிறார் அமலா பால்.

புதுப் படங்கள்
ஆடை கதை கேட்டதும் அமலா பாலுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். இது போன்ற கதை கிடைப்பது கடினம் என்பதால் அவரை தேடி வந்த பிற பட வாய்ப்புகளை கூட ஒப்புக் கொள்ளவில்லையாம். ஆடை படம் தனது கெரியரில் மறக்க முடியாத படமாக இருக்கும் என்று அமலா பால் திட்டவட்டமாக நம்புகிறார். ஆடை என்று தலைப்பு வைத்துவிட்டு படத்தில் ஆடையில்லாமல் தான் நடித்ததற்கான காரணம் படம் பார்க்கும்போது தெரியும் என்று அமலா பால் தெரிவித்துள்ளார்.

நிதானம்
அமலா பால் படங்களை தேர்வு செய்வதில் அவசரம் காட்டுவது இல்லை. தன்னைத் தேடி வரும் பட வாய்ப்புகளை எல்லாம் ஏற்காமல் தனக்கு பிடித்த கதாபாத்திரங்களையே தேர்வு செய்கிறார். இந்நிலையில் அவர் பாலிவுட் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். கோலிவுட்டை போன்றே பாலிவுட்டிலும் ஒரு ரவுண்டு வர ஆசைப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











