ஓடி போய் கல்யாணம் பண்ணோம்.. சின்னமருமகள் ஸ்வேதாவின் உண்மை முகம்.. ஆதாரங்களை வெளியிடுவேன்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியலில் தமிழ் செல்வி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ஸ்வேதா, காரணமே இல்லாமல் என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டதாக உதவி இயக்குநர் ஆதி காவல்நிலையத்தில் புகார் அளித்து இருக்கும் நிலையில் ஸ்வேதா பற்றி தன்னிடம் பல ஆதாரங்கள் இருப்பதாக கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தொடர் 'சின்ன மருமகள்'. இந்த சீரியலில் நாயகியாக நடிப்பவர் தான் ஸ்வேதா. ஸ்வேதாவின் கணவரான ஆதி அளித்து இருக்கும் பேட்டியில் நானும் ஸ்வேதாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தோம். எங்கள் காதலை ஸ்வேதாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால், வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டோம். என் மீது ஒரு வழக்கு இருக்கிறது, அது பற்றி ஸ்வேதாவிற்கு நன்றாக தெரியும், அதை காரணம் காட்டித்தான் ஸ்வேதாவின் பெற்றோர் என்னை நிராகரித்தார்கள்.

ரகசிய திருமணம்: ஸ்வேதா என்னை விரும்பியதால் திருமணம் செய்து கொண்டோம். எங்களுக்கு திருமணமானது ஒரு சிலருக்கு மட்டும் தான் தெரியாது. பொது இடத்தில் இருவரும் வர மாட்டோம், அதற்கு காரணம் என்னால் அவளுக்கு நடிப்பு ரீதியாக எந்த பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதால் தான் நான் விலகியே இருந்தேன். பெங்களுரில் இருந்து சென்னைக்கு அழைத்து வந்ததே நான் தான், இந்த கதையில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நான் அவருக்கு சொன்னோன். ஆனால், திடீரென ஸ்வேதா அம்மா வீட்டோடு சென்றுவிட்டார். என் அழைப்புகளையும் எடுக்கவில்லை, உருகி உருகி என்னை காதலித்தவளுக்கு திடீரென நான் பிடிக்காமல் போய்விட்டேனா என ஆதி பேசி உள்ளார்.
விவாகரத்து மனு: இந்த பேட்டி வெளியானதை அடுத்து, ஸ்வேதா இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார். இதில், ஒருவர் பொய்யான கதையை உருவாக்கி, நாங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டதாகக் கூறி வருகிறார். துரதிர்ஷ்டவசமாக, நான் அவரை அந்த நேரத்தில் ஆழமாக நம்பினேன் கூறியிருந்தார். இதையடுத்து, யார் என்றே தெரியாது என்று சொன்னவர் எப்படி எனக்கு விவாகரத்து மனுவை அனுப்ப முடியும் என்று கேள்வி எழுப்பியதோடு புகார் அளிப்பதாக கூறியிருந்தார்.
தாமரைச்செல்வி புகார்: இந்த பஞ்சாயத்தே தீராத நிலையில், சின்ன மருமகள் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை தாமரைச்செல்வி, நடிகை ஸ்வேதாவின் கணவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டார், நான் அவருக்காக மூன்று சவர நகையை அடகு வைத்து பணத்தை கொடுத்தேன், ஆனால், அவர் அந்த நகை விற்றவிட்டார். அவர் மீது ஐயப்பன்தாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்து இருப்பதாக கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











