Amala paul: எளிமையாக நடந்த அமலா பாலின் வளைகாப்பு... வாழ்த்திய பிரபலங்கள்!

சென்னை: அமலா பால் அறிமுகமான சிந்து சமவெளி படத்தில் தொடங்கி ஆடை படம் வரை சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத நடிகையாக இருக்கிறார். கடந்த சில ஆண்டுகளாக சினிமா பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்த இவர், தனது நீண்ட நாள் நண்பன் ஜெகத் தேசாயை திருமணம் செய்து கொண்ட நிலையில், நேற்று அமலா பாலுக்கு பாரம்பரிய முறைப்படி வளைகாப்பு நடந்துள்ளது.

சர்ச்சைக்கு பஞ்சமே இல்லாத நடிகையான அமலா பால் சினிமாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், திருமணமான சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

aadujeevitham actress amala paul baby shower function photos

விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வரும் அமலா பாலுக்கு,ஆரம்பத்தில் படவாய்ப்பு சரியாக அமையாததால், மன அழுத்தத்தில் இருந்த இவர், நண்பர்களுடன் சரக்கு பார்ட்டி ஆட்டம் பாட்டம் என வரம்பு மீறி நடந்து கொண்டு பெயரை கெடுத்துக்கொண்டார். தொடர்ந்து படங்கள் இல்லாததால்,கேடவர் என்ற படத்தை தயாரித்து அதில் நடித்தும் இருந்தார். அந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ஓரளவுக்கு பாராட்டை பெற்றது.

ஆடு ஜீவிதம்: கேடவர் படத்தை தொடர்ந்து அவருக்கு ஓரளவு படவாய்ப்பு வந்தது. மலையாள திரைப்படமான 'ஆடு ஜீவிதம்' என்ற பிரித்விராஜ் மனைவியாக நடித்துள்ளார். பிரபல மலையாள எழுத்தாளர் பெஞ்சமின் எழுதிய நாவலை மையமாக கொண்டு உண்மை கதையை அடிப்படையாக வைத்து உருவான இப்படத்தில், லிப் லாக் காட்சியில் நடித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கினார். இதற்கு எல்லாம் அலட்டிக்கொள்ளாத அமலா பால், நிர்வாணமாகவே நடித்துவிட்டேன் இதெல்லாம் ஒரு விஷயமா என கூலாக பதில் அளித்து அனைவரின் வாயையும் அடைத்தார். அந்த படம் தற்போது வெளியாகி வசூலை அள்ளி வருகிறது.

aadujeevitham actress amala paul baby shower function photos

தனுஷ் படத்தில் நடிக்கிறாரா?: மீண்டும் தனுஷுடன்: அமலா பால் தற்போது தனுஷ் இயக்கும் D50 படத்திற்கு ராயன் என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இப்படத்தில், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடிக்கின்றனர். அப்படத்தில் அமலா பால் கமிட்டாகி உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

காதல் திருமணம்: நடிகை அமலாபால், தன்னுடைய பிறந்த நாளன்று ஜெகத் தேசாய் என்பவரை காதலிப்பதாக புகைப்படத்துடன் அறிவித்தார். இதையடுத்து, ஒரே வாரத்தில் அவரை திருமணமும் செய்துகொண்டார். அமலா பால், ஜெகத் தேசாய் ஜோடியின் திருமணம் கடந்தாண்டு நவம்பர் மாதம் கொச்சியில் நடைபெற்றது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணமான இரண்டே மாதத்தில் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால்.

aadujeevitham actress amala paul baby shower function photos

வளைகாப்பு: இந்நிலையில், அமலா பாலுக்கு கேரளாவில் பாரம்பரிய முறைப்படி குடும்பத்தினரின் முன்னிலையில் வளைகாப்பு விழா நடைபெற்றது. அதில், அமலா பால் தன்னுடைய கணவர் ஜெகத் தேசாய் உடன் மகிழ்ச்சி பொங்க எடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன. அந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருவதோடு, அவருக்கு வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X