இனிமேல் நேஷனல் க்ரஷ் சாய் பல்லவிதான் போல.. அமீர் கான் ரொம்ப அழுதுட்டார்.. வேற லெவல் பாராட்டு
மும்பை: பிரேமம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான சாய் பல்லவி; இப்போது ஹிந்தியிலும் கலக்க தொடங்கியிருக்கிறார். அந்தவகையில் அவர் முதல் படமாக பாலிவுட்டில் ஏக் தின் படம் வரவிருக்கிறது. இதில் அமீர் கான் மகன் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். நேற்று இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அப்போது படத்தை பார்த்த அமீர் கான் கண்கள் கலங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவர் சாய் பல்லவியை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.
மலையாளத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்த சாய் பல்லவி முதல் படத்திலேயே பெரிய பெயரை பெற்றார். எங்கு திரும்பினும் மலர் டீச்சர், எதை கேட்பினும் மலர் டீச்சராகவே இருந்தது. இதன் காரணமாக அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தன. அதனை சரியாக பயன்படுத்தி ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பில் வேரியேஷன் காண்பித்தார். மேலும் தமிழ், தெலுங்கிலும் அறிமுகமானார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கு மாரி 2, என்ஜிகே என தமிழில் சரியாக படங்கள் அமையவில்லை. அப்போதுதான் கார்கி படத்தில் நடித்தார். படம் நல்ல பெயரை சம்பாதித்தது.

அமரன் சாய் பல்லவி: அவரது கரியரிலேயே மிகப்பெரிய வெற்றியும், பெயரையும் பெற்றுக்கொடுத்த படம் என்றால் அது அமரன்தான். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. முக்கியமாக, அந்தப் படம் ஓடியதற்கு சாய் பல்லவியின் நடிப்பு மட்டும்தான் காரணம். அதிலிருந்து பல்லவியின் நடிப்பை கழித்துவிட்டால் கண்டிப்பாக அமரன் படம் மெகா ஹிட்டாகியிருக்காது. சூப்பர் ஹிட் மட்டுமே ஆகியிருக்கும் எனவும் பலர் சொன்னார்கள்.
பாலிவுட்டில் கவனம்: அமரன் படத்தின் மெகா வெற்றி அவருக்கான மார்க்கெட்டை மேற்கொண்டு உயர்த்தியது. மேலும் ஹிந்தியிலிருந்தும் அவருக்கான வாய்ப்புகள் வர தொடங்கின. இதுவரை தமிழிலில்ருந்து சில நடிகைகள் சென்று பாலிவுட்டில் கோலோச்சி இருக்கிறார். பல்லவிக்கு இருக்கும் திறமைக்கு கண்டிப்பாக அவரும் அந்த நடிகைகளின் லிஸ்ட்டில் இணைவார் என்பது அவரது ரசிகர்களின் நம்பிக்கை. இதுவரை அவர் பணியாற்றிய ஹிந்தி படங்களின் இயக்குநர்கள்; ஸ்பாட்டில் அவரது நடிப்பை பார்த்து மிரண்டு விட்டார்கள் என தகவல்கள் வருகின்றன.
ஹிந்தியில் வெளியாகும் முதல் படம்: அவர் இப்போது அமீர் கான் மகனுக்கு ஜோடியாக ஏக் தின் என்ற படத்தில் நடித்திருக்கிறார். படமானது விரைவில் வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க இந்தப் படத்தின் சிறப்பு காட்சி திரையிடல் நேற்று மும்பையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினரும், அமீர் கான் உள்ளிட்டோரும் கலந்துகொண்டார்கள். படத்தை பார்த்த அமீர் கான் தனது மகனின் நடிப்பு, சாய் பல்லவியின் நடிப்பு ஆகிய இரண்டையும் பார்த்து ரொம்பவே கண்கள் கலங்கிவிட்டதாக பாலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாராட்டிய அமீர் கான்: மேலும் சாய் பல்லவியையும் அமீர் கான் வெகுவாக பாராட்டியிருக்கிறார். பல்லவியின் நடிப்பு குறித்து அவர் பேசுகையில், "இந்தியாவில் இருக்கும் சிறந்த நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி" என புகழ்ந்திருக்கிறார். இந்திய சினிமாவின் ஜாம்பவான்களில் ஒருவர் இப்படி ஒரு பாராட்டை கொடுத்திருப்பது பல்லவிக்கும், பல்லவியின் ரசிகர்களுக்கும் பெரிய மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுத்துள்ளது. அதுமட்டுமின்றி நேஷனல் லெவலில் பாராட்டுகள் கிடைக்க தொடங்கியிருப்பதால் விரைவில் சாய் பல்லவி நேஷனல் க்ரஷ்ஷாக மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications