40வது பிறந்தநாள்: ஐஸ்வர்யா ராய்க்கு ‘ஹேப்பி பர்த் டே’ பாடி வாழ்த்துச் சொன்ன ஆராத்யா
மும்பை: முன்னாள் உலக அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராய் பச்சனுக்கு இன்று 40வது பிறந்தநாள். அதனைத் தொடர்ந்து, இரண்டு வயது பூர்த்தியாகவுள்ள அவரது மகள் ஆராத்யா, அம்மாவிற்கு 'ஹேப்பி பர்த் டே டூ யூ' எனப் பாடல் பாடி வாழ்த்துத் தெரிவித்தாராம்.

ஐஸ்வர்யா ராய் -அபிஷேக் பச்சன் தம்பதிகளின் மகளான ஆராத்யாவிற்கு இம்மாதத்தோடு இரண்டு வயது பூர்த்தியாக உள்ளது. மழலைத் தமிழ் பேசி வரும் ஆராத்யா தனது அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் பாடி சந்தோஷப் படுத்தினாராம்.
இந்தப் பிறந்தநாளை குடும்பத்தினருடன் குறிப்பாக தனது செல்ல மகள் ஆராத்யாவுடன் தான் கொண்டாட விருப்பப் படுவதாக ஐஸ்வர்யாராய் பச்சன் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











