»   »  ஆர்த்தியை விரட்டும் தயாரிப்பாளர்கள்

ஆர்த்தியை விரட்டும் தயாரிப்பாளர்கள்

Subscribe to Oneindia Tamil

தற்கொலை முயற்சிக்குப் பிறகு நடிகை ஆர்த்தி அகர்வாலுக்கு தெலுங்கில் மவுசு கூடிவிட்டதாம். அவருக்கு அடுத்தடுத்துபடங்கள் புக்காவதாக கூறப்படுகிறது.

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஆர்த்தி அகர்வால். பகல்பன் என்ற இந்திப் படத்தில் தான் இவர் அறிமுகமானார்.அங்கிருந்து நேராகதெலுங்குக்கு வந்த அவருக்கு அடுத்தடுத்து படங்கள் ஓடியதால் இப்போது அங்கு முன்னணி நடிகையாகிவிட்டார்.

சமீபத்தில் இவர் நடித்து வெளியான சங்கராந்தி என்ற படம் சூப்பர் ஹிட்டாக ஓடியது. தமிழில் பிரஷாந்தின் வின்னர் படத்தில்இவர் ஒரு பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்தப் படத்தில் இவர் ஹீரோயினாக தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் ஏகப்பட்ட கால்ஷீட் குளறுபடிகளால் ஹீரோயின் வாய்ப்பு பறிபோனது. ஏற்கனவே இவர் நடித்திருந்த பாடல் காட்சியைமட்டும் படத்தில் சேர்த்து விட்டனர்.

ஆர்த்திக்கும், நடிகர் தருணுக்கும் காதல் இருந்து வந்தது. அஞ்சலி படத்தில் சிறுவனாக நடித்தாரே அவர் தான் இந்த தருண்.புன்னகை தேசம், எனக்கு 20 உனக்கு 18 ஆகிய படங்களிலும் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார்.

தருணும், ஆர்த்தியும் நுகுலேகா நேனு லேனு (நீயின்றி நானில்லை) என்ற படத்தில் முதல் முதலாக ஜோடி சேர்ந்தனர். முதல்படத்திலேயே இருவருக்கும் "பத்திக்கிச்சு. அப்புறமென்ன.. காதல் வானில் இருவரும் ஜோடியாக பறந்தனர்.

முதல் படத்தை அடுத்து 2வது படமும் வெற்றி பெற்றதால் இருவரும் ராசியான ஜோடியானார்கள். இருவரும் விரைவில்திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் தெலுங்கு பட உலகில் பேசிக்கொண்டனர்.

இந்த நிலையில் தான் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த நடிகர் தருண், நடிகை ஆர்த்தி அகர்வாலை காதலிக்கவில்லைஎன்று கூறினார். தருண் இவ்வாறு கூறிய அடுத்த சில நாட்களிலேயே ஐதராபாத்திலுள்ள தனது வீட்டில் வைத்து ஆர்த்தி அகர்வால்கழிப்பறைக்கு பயன்படுத்தும் ஆசிட்டை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர் தீவிர சிகிச்சைக்குப் பிறகு உடல் நலம் தேறினார். இதன் பிறகு நீண்டநாட்கள் ஆர்த்தி அகர்வால் படப்படிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்.

இந் நிலையில் இவருக்கு இப்போது தெலுங்கில் வாய்ப்புகள் குவியத் தொடங்கி விட்டதாம். தற்கொலை முயற்சிக்குப் பிறகுஆர்த்திக்கு மவுசு கூடிவிட்டதாக கூறப்படுகிறது. அய்யோ பாவம் என்று நினைத்தார்களோ என்னவோ.. நிறைய தயாரிப்பாளர்கள்கால்ஷீட் கேட்டு இவரது வீட்டுக்கு படையெடுக்கிறார்கள்.

வழக்கம் போல படப்பிடிப்புகளில் தலைகாட்டத் தொடங்கி விட்ட ஆர்த்தி, சமீபத்தில் ஒரு படப்பிடிப்புக்காக சென்னைக்குவந்திருந்தாராம்.

இவரிடம் காதல் விவகாரம் குறித்து கேட்டால், இதைப்பற்றி எதுவும் என்னிடம் எதுவும் கேட்காதீர்கள் என்று கூறி நழுவிவிடுகிறார்.

சரி, ஆர்த்திக்கு படங்கள் புக்காகிறதே.. நம்ம தருணின் மார்க்கெட் எப்படி இருக்கிறது என்று விசாரித்தால் அவரது மார்க்கெட்எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறதாம்.

பாவம் இவர் மீது யாருக்கு என்ன கோபமோ..!

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil