அந்தரத்தில் அந்தர் பல்டி அடிக்கும் ஆஷ்கா ! கம்பியை பிடித்து கொண்டு வீரசாகசம்!

சென்னை : கம்பியை பிடித்துக்கொண்டு யோகா, உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்துள்ளார் ஆஷ்கா.

டிவி தொடர்களில் நடித்து வந்த இவர், நாகினி சீரியலில் நடித்து பிரபலமானார்.

சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், கணவருடன் உடற்பயிற்சி செய்வது, தலைகீழாக தொங்கும் போன்ற புகைப்படங்கள் பகிர்ந்து அதை வைரலாகி உள்ளார்.

மிகவும் முக்கியம்

மிகவும் முக்கியம்

எப்பொழுதும் உடல் ஆரோக்கியத்தின் மீதும், யோகாவிலும், உடற்பயிற்சியிலும் மிகுந்த ஆர்வம் காட்டுபவர் ஆஷ்கா கோரடியா. அன்றாடம் விதவிதமான யோகா போஸ்களில்சமூகவலைதளத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருப்பார். எப்போதும் பிகினியில் தனது ரசிகர்களுக்கு காட்சிக் கொடுக்கும் ஆஷ்கா .

பிக் பாஸ் எண்ட்ரி

பிக் பாஸ் எண்ட்ரி

டிவி தொடர்களில் நடித்து வந்த இவர், சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலமாகவே மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்து விட்டார். பிறகு நாகினி , நாகினி 2 போன்ற சீரியல்களிலும் பெருமளவு பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு இவருக்கு கிடைத்தது , அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு அனைவரின் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.

இரண்டாம் காதல்

இரண்டாம் காதல்

இவரது முதல் காதல் தோல்வி அடைந்தது இருந்தும், அதிலிருந்து வெளிவந்து தனது இரண்டாம் காதலில் வெற்றி கண்டார். எப்பொழுதும் கவர்ச்சியாகவே புகைப்படங்களை வெளியிட்டு கொண்டு இருக்கும் பல நடிகைகளுக்கு மத்தியில், இப்படி கூட யோகா செய்ய முடியுமா ?உடற்பயிற்சியை செய்ய முடியுமா? என்று அனைவரும் வியக்கும் வண்ணம் பல விதமான பல யோகாக்கலை செய்து சமூக வலைதளத்தை தெறிக்க விட்டுக் கொண்டிருப்பார்.

கம்பியிலேயே சுற்றி

கம்பியிலேயே சுற்றி

அன்றாடம் வேறுவேறு லொகேஷனில் தனது உடற்பயிற்சியை செய்து கொண்டிருந்த இவர் சமீபகாலமாக வீட்டுக்குள்ளேயே ஒரு கம்பியை வைத்துக்கொண்டு அவர் செய்யாத சேட்டையே இல்லை என்று சொல்லலாம். ஒரு கம்பியை பிடித்துக் கொண்டு சுற்றுவதும், சூழலுவதும் மேலே கீழே குதிப்பதும் ,என்று பல சாகசங்களை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகிறார்.

மிகவும் அழகானது

மிகவும் அழகானது

இதை பார்த்த பல ரசிகர்களும் இவரது நன்கு வளையும் உடலையும் , உடற்பயிற்சி செய்யும் ஆர்வத்தையும், பெரிய அளவு பாராட்டியே வருகின்றனர். கடவுளின் படைப்பில் பெண்களின் உடல் மிகவும் அழகானது என்று அடிக்கடி கருத்து கூறியும் பல ரசிகர்களை கவர்ந்தார் இவர்.

நிர்வாண புகைப்படம்

நிர்வாண புகைப்படம்

யோகாக்கள் மட்டுமல்லாமல், பல விதமான கவர்ச்சியான போட்டோசூட் நடத்தி, அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, அவர் ரசிகர்களை அவ்வப்போது குஷிப்படுத்தி கொண்டே இருப்பார். அவர் வெளியிட்ட நிர்வாணப் புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைதளங்கள் பெருமளவு பகிரப்பட்டு வந்தது.இப்போது இந்த கம்பியை பிடித்துக் கொண்டு இவர் செய்யும் சாகசங்களையும் வீடியோக்கள் அவரது ரசிகர்களால் பெருமளவு ரசிக்கப்படும் ,ஷேர் செய்யப்பட்டும் வருகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X