பாவாடை தாவணியில் அசத்தும் ஆத்மிகா.. அடடா என்ன அழகு!
சென்னை : தொடர்ந்து கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள நடிகை ஆத்மிகா இப்பொழுது பாவாடை தாவணியில் அம்சமாக இருக்கும் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்..
காட்டேரி, நரகாசுரன் ஆகிய படங்களை தொடர்ந்து இப்போது விஜய் ஆண்டனியின் கோடியில் ஒருவன் படத்தில் கதாநாயகியாக நடித்திருக்க இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இளம் நடிகையான ஆத்மிகா முன்னணி நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் எக்கச்சக்கமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் இப்போது பாவாடை தாவணியில் கொள்ளை அழகில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

கிடப்பில் போடப்பட்ட
திரில்லர் திரைப்படங்களை வித்தியாசமான முறையில் இயக்கி பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் அளவிற்கு படங்களை கொடுத்து அதில் வெற்றியும் கண்டு வரும் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் தயாரிப்பில் உருவாகியிருந்த நரகாசுரன் திரைப்படத்தில் ஆத்மிகா, அரவிந்த் சுவாமி, ஸ்ரேயா சரண் உள்ளிட்டோர் நடித்திருக்க பணப் பிரச்சினை காரணமாக இதுவரை வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த படம் இப்போது ஓடிடியில் வெளியாக உள்ளது என சில தகவல்கள் கசிந்துள்ளது.

ஆத்மிகா உடன் ரொமான்ஸ்
இசையமைப்பாளராக இருந்து வெற்றிகரமான ஹீரோவாகவும் மாறி இருக்கும் விஜய் ஆண்டனி சமீபகாலமாகவே ஆக்சன் கதைகளில் மிகுந்த கவனம் செலுத்தி வர மெட்ரோ இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் நடித்திருக்கும் கோடியில் ஒருவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். டீசர் வெளியாகி சக்கைபோடு போட்டது. இதில் இவர் டியூஷன் மாஸ்டராக வெளுத்து கட்டியும் ஆத்மிகா உடன் ரொமான்ஸ் காட்சியில் தாறுமாறு செய்துள்ளாராம்.

கிடக்கின்றனர்
ஆத்மிகா நடித்தது சில படங்கள் மட்டுமே என்றாலும் ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகையாக உள்ளார். சமூக வலைதளங்களில் பல லட்சக்கணக்கில் ஃபாலோவர்ஸ்களை ரசிகர்களாக கொண்டிருக்க இவர் பதிவிடும் புகைப்படங்களுக்காகவே பலரும் தவம் கிடக்கின்றனர்.

கிராமத்து மண் வாசனையுடன்
அரைகுறை ட்ரெஸ்ஸில் இதுவரை கவர்ச்சியை அள்ளித் தெளித்து வந்த ஆத்மிகா இப்போழுது பிங்க் நிற பாவாடை தாவணியில் கிராமத்து மண் வாசனையுடன் அசத்தும் அழகில் செம க்யூட்டாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஐ லவ் யூ சொல்லி காதலிக்குமாறு டார்ச்சர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











