பில்லா அஜித்துன்னு நினைப்பா... நீச்சல் குள புகைப்படத்தை வெளியிட்ட நடிகை.. கலாய்க்கும் ரசிகர்கள்!
சென்னை : மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக கோடியில் ஒருவன் படத்தில் ஆத்மிகா நடித்துள்ளார்.
கோடியில் ஒருவன், காட்டேரி, நரகாசசூரன் ஆகிய படங்கள் ஆத்மிகாவிற்கு அடுத்தடுத்து வெளியாக உள்ளது.
இனி கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க தயார் என எக்கசக்கமாய் கிளாமர் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் மிதக்க விட்டு வரும் ஆத்மிகா இப்பொழுது வெளியிட்டுள்ள நீச்சல்குளம் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

பாராட்டுகளை அள்ளியவர்
இசையமைப்பாளராக இருந்து இப்பொழுது ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹிப்ஹாப் ஆதி முதல் முறையாக கதாநாயகனாக நடித்த மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. செம க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலேயே பாராட்டுகளை அள்ளியவர்.

ரிலீஸ் தாமதமாகி
அரவிந்த்சாமி,சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண்,ஆத்மிகா இணைந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்திருந்த நரகாசூரன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசாக தயாராக இருந்தும் இன்றுவரை பணப் பிரச்சினை காரணமாக ரிலீஸ் தாமதமாகிக் கொண்டுள்ளது.
Recommended Video

ரொமான்டிக் காட்சிகள்
மெட்ரோ என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் ஆனந்தகிருஷ்ணன் இப்பொழுது கோடியில் ஒருவன் படத்தை இயக்கியுள்ளார். இதில் விஜய் ஆண்டனி டியூஷன் மாஸ்டராக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பட்டையை கிளப்பியது அதில் விஜய் ஆண்டனி உடனான ரொமான்டிக் காட்சிகள் ரசிகர்கள் குஷிப்படுத்தியுள்ளது.

பில்லா அஜித்துன்னு
இப்போதைக்கு கோடியில் ஒருவன் மட்டுமே ஆத்மிகா வுக்கு நம்பிக்கை தரும் வகையில் இருக்க இந்த படம் வெளியானால் கட்டாயமாக மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இனி படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களிலும் நடிக்க தயார் என கிளாமர் புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் மிதக்க விட்டு வரும் ஆத்மிகா இப்பொழுது நீச்சல் குளத்தில் பிகினியில் நின்றவாறு செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பில்லா அஜித்துன்னு நினைப்பா என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











