தாதா செயின்.. வில்லன் டைப் லாங் கோட்.. தங்க நிறத்தில் ஜொலிக்கும் ஆத்மிகா!
சென்னை : தமிழ் சினிமாவில் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வருபவர் நடிகை ஆத்மிகா.
மீசைய முறுக்கு படத்தை தொடர்ந்து நரகாசூரன், காட்டேரி,கண்ணை நம்பாதே, கோடியில் ஒருவன் ஆகிய படங்கள் ரிலீசாக உள்ளது.
நடிப்பதில் மட்டுமல்லாமல் கவர்ச்சியிலும் பின்னி பெடல் எடுத்து வரும் ஆத்மிகா இப்பொழுது தாதா செயினில் வில்லன்கள் போல லாங் கோட் அணிந்து கொண்டு செம ஸ்டைலிஷாக போஸ் கொடுத்த போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வருகிறது.

எக்கச்சக்கமான ரசிகர்களை
தமிழ் சினிமாவிற்கு சமீபத்திய வரவாக அறிமுகப் படுத்தப்பட்ட நடிகை ஆத்மிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். இசையமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதி ஹீரோவாக நடித்து இயக்கி இருந்த மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் படத்திலேயே எக்கச்சக்கமான ரசிகர்களை தன் பக்கம் இழுத்தவர்.

விரைவில் ஓடிடியில்
இப்பொழுது கார்த்திக் நரேனின் நரகாசூரனில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார்ம் இப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ரிலீசாக தயாராக இருந்தும் இன்றுவரை பணப்பிரச்சினை காரணமாக ரிலீசாகாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. விரைவில் ஓடிடியில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. காட்டேரி, கண்ணை நம்பதே உள்ளிட்ட படங்களும் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

ரொமான்ஸ் காட்சிகளில்
சைலண்டாக சம்பவங்களில் செய்து ஹிட் படங்களை கொடுத்து வரும் நடிகர் விஜய் ஆண்டனி இப்பொழுது மெட்ரோ இயக்குனருடன் இணைந்த கோடியில் ஒருவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். பக்கா கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்க இதில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். அனைத்து வேலைகளும் முடிந்து கோடியில் ஒருவன் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. பாடல்களில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து ஆத்மிகா ரொமான்ஸில் பட்டையை கிளப்பியுள்ளாராம்.
Recommended Video

தங்க நிறத்தில் ஜொலிக்கும்
ஒருபுறம் அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வந்தாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு படமும் ஆத்மிகாவுக்கு ரிலீஸ் ஆகவில்லை என ரசிகர்கள் ஒருபுறம் வருத்தத்தில் இருக்க ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் அடிக்கடி கிளாமர் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆத்மிகா இப்பொழுது சினிமாவில் வரும் தாதாக்கள் போல முரட்டு சைஸில் செயின் மற்றும் வில்லன் டைப் லாங் கோட் உடன் செம ஸ்டைலிஷாக தங்க நிறத்தில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கிக்கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications